எச்சரிக்கை இளநீர் யாரெல்லாம் குடிக்க கூடாது! ஏன் தெரியுமா?  

0
199
#image_title

எச்சரிக்கை இளநீர் யாரெல்லாம் குடிக்க கூடாது! ஏன் தெரியுமா? 

இளநீர் உடலுக்கு தேவையான ஏராளமான சத்துக்களை கொண்டுள்ளது. இளநீரில் உள்ள இளநீரை மட்டும் குடிக்காமல் வழுக்கையையும் சேர்த்து சாப்பிட வேண்டும். அப்பொழுதுதான் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

நன்மைகள்:

1. ரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்தங்களை நீக்குகிறது. ரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் இளநீரை குடித்து வந்தால் இதற்கான பலனை காணலாம்.

2. உடல் வறட்சியினால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுகிறது. இதனை சரி செய்வதற்கு இளநீர் உதவுகிறது.

3. இளநீர் குடிப்பதால் உடலில் உள்ள சூட்டை குறைக்கிறது. வயிற்றில் உள்ள புண்களுக்கு தினமும் ஒரு இளநீர் குடித்து வந்தால் நல்ல தீர்வை காணலாம்.

4. முகப்பரு வராமல் தடுக்க உதவுகிறது. சரும பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

பக்க விளைவுகள்;

** ஒரு நாளைக்கு ஒரு இளநீர் குடிக்க வேண்டும். அதாவது 250 ml முதல் 300ml வரை ஒரு நாளைக்கு குடிக்க வேண்டும். இதற்கு மேல் அதிகமாக குடித்தால் உடலில் பொட்டாசியம் மற்றும் கார்போஹைட்ரேட் அளவை அதிகப்படுத்தி பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

** ரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்கள் இளநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் அதிகமாக இளநீர் அருந்தக்கூடாது. ஏனெனில் இளநீர் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லதல்ல.

** ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் காலை மற்றும் மாலை வேலைகளில் வெயில் இல்லாத நேரங்களில் இளநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.