உக்ரைன் மீது போர் தொடுத்தது சோவியத் ரஷ்யா!

0
77

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை அறிவித்திருக்கிறார். அதாவது பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக உக்ரைன் மீது போர் தொடுக்கும் அறிவிப்பாக இது பார்க்கப்படுகிறது அதே வேளையில் இது பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கம் கொண்டது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து 82வது வான்வெளி பிரிவைச் சார்ந்த அமெரிக்க ராணுவ வீரர்கள் நேற்று கூட்டாளிகளுக்கு உறுதியளிக்கும் விதமாக உளுந்து இருக்கு அனுப்பு பட்டுள்ளார்கள் அர்லமோ அருகிலுள்ள ஒரு விமான தளத்தில் படைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு தொலைக்காட்சி உரையாற்றும்போது ரஷ்ய அதிபர் தெரிவிக்கும்போது உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கம் ரஷ்யாவிற்கு இல்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். உக்ரேனிய ஆட்சியாளர்களே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று எச்சரித்திருக்கிறார்.

ரஷ்யாவின் நடவடிக்கையில் தலையிடும் எந்த ஒரு முயற்சியும் அவர்கள் இதுவரையில் சந்திக்காத விளைவுகளை உண்டாக்கும் என்று மற்ற நாடுகளை அவர் எச்சரிக்கை செய்திருக்கிறார்.

கிழக்கு உக்ரைனில் உள்ள கிளர்ச்சியாளர்கள் உக்ரைனிய ஆக்கிரமிப்பை தடுக்க நேற்றைய தினம் ராணுவ உதவியை ரஷ்யாவிடம் கேட்டதாக தெரிவிக்கப்பட்டது மேற்கு நாடுகள் எச்சரித்தது போலவே போருக்கான காரணங்களை ரஷ்யா முன்வைத்திருக்கிறது என்ற அச்சத்தை உடனடியாக இது உண்டாக்கியிருக்கிறது.

சற்று நேரம் கழித்து உக்ரேனிய அதிபர் தன்னுடைய நாடு ரஷ்யாவிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்ற மாஸ்கோவின் கூற்றுகளை நிராகரித்தார். அதோடு ரஷ்ய படையெடுப்பு பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கும் என்றும் அச்சம் தெரிவித்திருக்கிறார்.

மேலும் உக்ரைன் மக்களும் உக்ரைன் அரசாங்கமும் அமைதியை விரும்புகின்றனர் என்று அதிபர் விலாடிமீர் ஜெலன்ஸ்கி ரஷ்ய குடிமக்களுக்கு நேரடியாக வேண்டுகோள் விடுக்கும் விதத்தில் ரஷ்யா மொழியில் உரையாற்றினார்.

ஆனாலும் நாம் தாக்குதலுக்கு உள்ளானால் நம்முடைய நாட்டையும் நம்முடைய சுதந்திரத்தையும் நம்முடைய வாழ்க்கையையும் நம்முடைய குழந்தைகளின் வாழ்க்கையையும் குலைக்கும் முயற்சியை எதிர்கொண்டால் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வோம் நீங்கள் எங்களை தாக்கும் போது எங்கள் முகங்களை பார்ப்பீர்கள் எங்கள் முதுகை அல்ல என அவர் உணர்ச்சிகரமாக பேசி இருக்கிறார்.

நேற்றைய தினம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உடன் ஒரு அழைப்பை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக திரு ஜெலன்ஸ்கி தெரிவித்தார். இருந்தாலும் கூட கிரெம்லின் இதற்கு பதில் தெரிவிக்கவில்லை.

கிழக்கு உக்ரைனில் அமைதியை பாதுகாக்க ரஷ்ய ராணுவத்தின் நிலைநிறுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கும் விளாடிமிர் புடினின் நடவடிக்கையை வெளிப்படையாக குறிப்பிடும்போது அதிபர் ஜெலன்ஸ்கி இந்த நடவடிக்கையை ஐரோப்பிய கண்டத்தில் ஒரு மிகப்பெரிய போரின் ஆரம்பத்தை குறிக்கும் என்று எச்சரிக்கை செய்தார்.

ரஷ்யாவின் பிரச்சாரத்திற்கு அவர் பதிலடி கொடுத்தார். இந்த நெருப்பு உக்ரைன் மக்களுக்கு சுதந்திரத்தை கொண்டுவரும் என நீங்கள் தெரிவிக்கிறார்கள் ஆனாலும் உக்ரைனிய மக்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள் என தெரிவித்திருக்கிறார்.

மேலும் உக்ரைனின் வேண்டுகோளின் தேரில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் புதனன்று இரவு அவசர கூட்டத்தை விரைவில் கூட்ட திட்டமிட்டது உக்ரேனிய வெளியுறவு அமைச்சர் பிரிவினைவாதிகளின் கோரிக்கையை பாதுகாப்பு நிலைமையை மேலும் அதிகரிப்பது என தெரிவித்தார்.

திங்கள் கிழமையன்று பிரிவினைவாத பகுதிகளின் சுதந்திரத்தை விளாடிமிர் புட்டின் அங்கீகரித்து கிளர்ச்சிப் பகுதிகளுக்கு படைகளை அனுப்புவதற்கு ஒப்புதல் வழங்கி நாட்டிற்கு வெளியே ராணுவ பலத்தை பயன்படுத்த நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்று பிறகு அண்டை நாடுகளுக்கு எதிரான உடனடி ரஷ்ய தாக்குதல் தொடர்பான கவலை அதிகரித்தது. மேற்கு நாடுகள் பொருளாதார தடை உடன் பதில் அளித்தனர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கிளர்ச்சி தலைவர்கள் நடைமுறைக்கு புதன்கிழமை அன்று கடிதம் எழுதியதாக கிரெம்லின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். உக்ரைனிய செல் தாக்குதலில் பொதுமக்களின் மரணம் மற்றும் முக்கிய உட்கட்டமைப்பு அழிக்கப்பட்ட பிறகு தலையிடுமாறு கேட்டுக் கொண்டார்.

ரஷ்யாவின் உதவிக்கான பிரிவினைவாதிகளின் கோரிக்கையை போருக்கான நடிப்பாக ரஷ்யா பயன்படுத்தும் என்று அமெரிக்காவும் ,அதன் நட்பு நாடுகளும், எதிர்பார்த்தது போலவே நடந்திருக்கிறது. என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.