பித்தப்பை கல் கரைய வேண்டுமா? இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்!

0
183
#image_title

பித்தப்பை கல் கரைய வேண்டுமா? இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்!

இந்த வாழைத்தண்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. வாழைத்தண்டை பொறியலாகவும் அல்லது சூப்பாகவும் செய்தும் சாப்பிடலாம். வாழைத்தண்டை முதலில் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இதனுடன் ஐந்து பல் பூண்டு ,சீரகம், மிளகு ,ஏழு அல்லது எட்டு சின்ன வெங்காயம் ,ஒரு தக்காளி பழம் ஒரு குக்கரில் வாழைத்தண்டை போட்டு அதனுடன் பூண்டு ,சீரகம், மிளகு, சின்ன வெங்காயம், தக்காளி பழம், இவைகளை போட்டு நன்றாக குக்கரில் வேக வைக்க வேண்டும். பிறகு நான்கு விசில் விட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.

வேகவைத்த வாழைத்தண்டை வடிகட்டி தண்ணீரை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில் வேகவைத்து எடுத்து வைக்கப்பட்ட அந்த வாழைத்தண்டை போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். மேலும் ஒரு பாத்திரத்தில் நான்கு துண்டு சின்ன வெங்காயம், கருவேப்பிலை இஞ்சி இந்த மூன்றையும் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். பிறகு வேக வைத்த வாழைத்தண்டு தண்ணீரை அதில் ஊற்றி நன்றாக கலந்து விட வேண்டும். நன்றாக கொதிக்க விட்டு அதில் கொத்தமல்லி தழை பெருங்காயம் போன்றவற்றை கலந்து விட வேண்டும். மேலும் இந்த சூப்பை குடிப்பதனால் பித்தப்பை கற்கள் போன்ற பிரச்சனைகள் குணமாகிறது.

author avatar
Parthipan K