பெண்குழந்தை பாதுகாப்புத்திட்டத்தில் பயன்பெற வேண்டுமா? உடனே இந்த ஆவணங்களை சமர்ப்பியுங்கள்!

0
102
Want to avail the girl child protection scheme? Submit these documents immediately!
Want to avail the girl child protection scheme? Submit these documents immediately!
பெண்குழந்தை பாதுகாப்புத்திட்டத்தில் பயன்பெற வேண்டுமா? உடனே இந்த ஆவணங்களை சமர்ப்பியுங்கள்!
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும்
முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 2002 முதல் 2007
வரை விண்ணப்பித்து வைப்புத்தொகை பத்திரம் பெற்றவர்கள்
முதிர்வுத்தொகை வேண்டி விண்ணப்பிக்கலாம்.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 2002 முதல் 2007 வரை விண்ணப்பித்து, பத்திரம் பெறப்பட்ட பயனாளிகளில், முதிர்வுத் தொகை கிடைக்கப்பெறாமல் உள்ள 18 வயது நிரம்பிய பயனாளிகள்,தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட பத்திர நகல்,பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் பயனாளியின் புகைப்படம், ஆகிய ஆவணங்களை சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் சமூகநல விரிவாக்க அலுவலர்/மகளிர் ஊர்நல அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
பெண்குழந்தை பாதுகாப்புத்திட்டத்தில் பயன்பெறுமாறு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.வீ.முரளீதரன்,இ.ஆ.ப., அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
மாவட்ட சமூகநல அலுவலகம்,
அறை எண்.67, மூன்றாம் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
தேனி.
தொலைபேசி எண்:04546-254368