திமுக வின் 1000 ரூபாய் உதவித்தொகை வேண்டுமா?? இதை செய்யுங்கள்!!

0
124
Want DMK's Rs 1000 grant ?? Do this !!
Want DMK's Rs 1000 grant ?? Do this !!

திமுக வின் 1000 ரூபாய் உதவித்தொகை வேண்டுமா?? இதை செய்யுங்கள்!!

திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெண்களுக்கான 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது இந்த நிலையில் பெண்கள் புகைப்படம் ரேசன் அட்டையில் சேர்க்க அனைவரும் அலைமோதி வருகின்றனர். ரேசன் அட்டையில் குடும்பத் தலைவியின் படம் இருந்தால் தான் நிவாரணம் வழங்கப்படும். எனவே அனைவரும் ரேசன் அட்டையில் குடும்பத் தலைவியின் படத்தை மாற்றுவதற்காக அரசு அலுவலகங்களை நாடி வருகின்றனர். தமிழகத்தில் தற்போது பதவியேற்றுள்ள திமுக அரசு அதன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி பெண்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இதன் அடிப்படையில் பெண்களுக்கு நகரப்புறங்களில் கட்டணமில்லா பேருந்து திட்டத்தை ஏற்கனவே நடைமுறைப்படுத்தியது.

இதைத்தொடர்ந்து குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்த உள்ளது. மேலும் குடும்பத் தலைவியின் புகைப்படம் ரேஷன் அட்டையில் இருந்தால் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற முடியும் என கூறப்படுகிறது. அதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு அலுவலகங்களில் மக்கள் தங்களின் ரேசன் அட்டையை குடும்பத் தலைவியின் புகைப்படத்தை மாற்ற அலைமோதி வருகின்றனர். இதனால் அரசு அலுவலகங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது கொரோனா தொற்றின் பாதிப்பையும் பொருட்படுத்தாமல் மக்கள் அனைவரும் கூட்டமாக அரசு அலுவலகங்களில் நாடுகின்றனர். ஏற்கனவே குடும்பத் தலைவரின் புகைப்படம் உள்ள ரேஷன் அட்டையில் குடும்பத் தலைவியின் புகைப்படத்தை சேர்க்க விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றது.

இதுதொடர்பாக அரசு அதிகாரி கூறுகையில்
வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்கள், அந்தியோதயா அன்னயோஜனா திட்ட அட்டை பயன்படுத்துவோர் குடும்பத் தலைவரின் புகைப்படத்திற்கு பதிலாக குடும்பத் தலைவியின் புகைப்படத்தை மாற்ற விண்ணப்பித்து வருகின்றனர் அனைவரின் விண்ணப்பமும் பரிசீலனை செய்த பிறகு மாற்றித் தரப்படும் ஆனால் எந்த விதமான ரேசன் அட்டைகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அரசு தரப்பில் இருந்து எந்த தகவலும் வரவில்லை இந்நிலையில் குடும்பத் தலைவரின் புகைப்படத்தை மாற்றி குடும்பத் தலைவியின் புகைப்படத்தை ரேசன் அட்டையில் வைக்க விண்ணப்பங்கள் அதிக அளவில் குவிந்து வருகிறது என்றார்.

author avatar
Preethi