Connect with us

Astrology

லட்சுமி கடாட்சம் நிறைய வேண்டுமா? பூஜை அறையில் கண்ணாடியை இவ்வாறு பயன்படுத்துங்கள்!

Published

on

லட்சுமி கடாட்சம் நிறைய வேண்டுமா? பூஜை அறையில் கண்ணாடியை இவ்வாறு பயன்படுத்துங்கள்!

நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் மற்றும் பணப்புழக்கம் அதிகரிக்க பூஜையறையில் கண்ணாடியை எவ்வாறு வைக்கலாம் என்று பதிவு மூலம் காணலாம். மேலும் பூஜை அறையில் கண்ணாடி வழிபடலாமா அதனை எவ்வாறு வைத்து வழிபட வேண்டும் என்றும் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement

நாம் கண்ணாடியை எந்த திசையில் வைத்தால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் என்று பல்வேறு ஆன்மீக குறிப்புகள் உள்ளன. பொதுவாக வீட்டில் எந்த இடத்தில் கண்ணாடி வைத்திருந்தாலும் அவை உடைந்திருக்கக் கூடாது. முகம் பார்க்கும் கண்ணாடி சிறிய இடத்தில் உடைந்து இருந்தால் கூட அதில் நாம் முகம் பார்க்க கூடாது.

கண்ணாடி முன் நின்று நாம் எதை கூறினாலும் அவை நடக்கும் என்பது ஐதீகம். மேலும் பணம் வைக்கும் பெட்டி, பீரோ போன்றவைகளில் கண்ணாடி இருந்தால் மிகவும் அதிர்ஷ்டம். காரணம் கண்ணாடி என்பது ஒன்றை பிரதிபலிக்கும் தன்மை கொண்டது அதனால் பணத்தை வைத்தால் பணம் அதில் பல மடங்காக பிரதிபலிக்கும்.

Advertisement

அதனால் நமக்கு பணமும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. பொதுவாக பூஜை அறையில் விளக்கு ஏற்றுவது உண்டு அவை நம் வாழ்வில் ஒளி பிரகாசத்தை அளிக்கும் என்று நம்பிக்கையில் தான்.

அதுபோல பூஜை அறையில் வைக்கக்கூடிய கண்ணாடி வட்டம் வடிவில் இருக்க வேண்டும். பூஜை அறையில் வைக்கும் கண்ணாடி கிழக்கு திசையில் நோக்கி வைக்க வேண்டும். அப்போது கண்ணாடியின் முன் கண்ணாடி பௌல், பெரிய அகல் விளக்கு பயன்படுத்தலாம்.

Advertisement

அதில் கல் உப்பு நிரப்பி வைக்க வேண்டும். அந்த கல்லுப்பில் ஒரு ரூபாய் நாணயம் வைக்க வேண்டும். அதன் பிறகு பச்சரிசி வைக்க வேண்டும். அந்த பச்சரிசியில் விரலி மஞ்சள் ஒன்றை வைக்க வேண்டும். அதன் பிறகு அதில் ரூபாய் நோட்டுகள் தங்க நாணயமும் வைத்து வழிபடலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நம் வீட்டில் நேர்மறை எண்ணங்களும் லட்சுமி கடாட்சியமும் பெருகும்.அதன் பிறகு கண் திருஷ்டி அகலும்.

Advertisement