குழந்தை வரம் வேண்டுமா? கட்டாயம் இந்த நரசிம்மரை வழிபடுங்கள்!

0
115

குழந்தை வரம் வேண்டுமா? கட்டாயம் இந்த நரசிம்மரை வழிபடுங்கள்!

தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு நரசிம்மர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க…

இந்த கோயில் எங்கு உள்ளது?

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள வேதாத்ரி என்னும் ஊரில் அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

கிருஷ்ணாவில் இருந்து சுமார் 88 கி.மீ தொலைவில் வேதாத்ரி உள்ளது. வேதாத்ரியில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

இங்குள்ள நரசிம்மர் சுயம்புவாக புற்று வடிவில் அமைந்திருப்பது இத்தலத்தின் மிகச்சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

வேதாத்ரி கோயிலில் அடிவாரத்தில் இருந்து 285 படிகள் ஏறினால் சுயம்பு நரசிம்மர் புற்று வடிவில் காட்சியளிப்பதைக் காணலாம்.

இக்கோயிலில் ஆஞ்சநேயருக்கு சுதை சிற்பம் அமைந்துள்ளது. இங்கு நாகர் சிற்பங்களும் உள்ளன.

இக்கோயிலில் திருநீறு வழங்கப்படுவதில்லை பதிலாக தீர்த்தம் தருகின்றனர் மற்றும் சிவபாதம் பொறித்த சடாரியும் வைக்கின்றனர்.

குழந்தையில்லாத பக்தர்கள் வேதாத்ரி நரசிம்மருக்கு உய்யால வழிபாடு செய்வதாக வேண்டிக் கொள்கின்றனர். உய்யால என்றால் தொட்டில் என்று பொருள். குழந்தை பிறந்ததும் நரசிம்மரையும், செஞ்சுலட்சுமி தாயாரையும் தொட்டிலில் வைத்து ஆட்டும் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

வேறென்ன சிறப்பு?

இங்குள்ள நரசிம்மர் வீர நரசிம்மர் என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறார். இக்கோயிலில் ஜ்வாலா நரசிம்மர், வீர நரசிம்மர், சாளக்கிராம நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், கருவறையில் யோகானந்த நரசிம்மர் என ஐந்து நரசிம்மர்கள் வீற்றிருக்கின்றனர்.

நரசிம்மர் கோயிலாக இருந்தாலும், இங்கு வீரபத்ர சுவாமி மற்றும் சிவனுக்கும் தனிச்சன்னதி உள்ளது. சிவன் முன் நந்தி இருக்கிறார்.

இக்கோயிலில் சிவபெருமானை ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி என்றும், அம்பிகையை பார்வதி அம்மவாரு என்றும் அழைக்கின்றனர்.

இந்த நரசிம்மரை வழிபட்டால் கலியுகத்தில் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

நரசிம்ம ஜெயந்தி இக்கோயிலில் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

குழந்தை வரம் வேண்டுவோர் இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியதும் கத்தியை காணிக்கையாக செலுத்தி நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.

author avatar
Parthipan K