அரசியலில் இருந்து விலகிய சசிகலா! உண்மையான காரணம் இதுதானா?

0
141

கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையான சசிகலா தமிழகம் வந்து சேர்வதற்குள் தமிழகமே தப்பித்து போனது என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு வழிநெடுகிலும் அவருக்கான பாராட்டுக்களும், வரவேற்பும், குவிந்திருந்தன அவர் அப்படி தமிழகத்திற்கு ஒரு பெரிய ஆரவாரத்துடன் வந்ததற்கு காரணம் அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்பது தான் என்று சொல்கிறார்கள்.

ஆனால் தமிழகம் வந்து சேர்ந்த சசிகலா தமிழகம் வந்ததிலிருந்தே எந்த ஒரு ரியாக்ஷனும் காட்டாமல் அமைதியாகவே இருந்து வந்தார். அரசியல் தொடர்பான நடவடிக்கைகளில் இருந்தும் ஒதுங்கியே இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும் டிடிவி தினகரன் எப்பொழுதும் போல கட்சி பணிகளை செய்து வந்தார்.இதற்கு இடையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசும் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வந்தது அதற்கான அழுத்தத்தை டிடிவி தினகரன் உள்துறை அமைச்சர் அமித்ஷா மூலம் அதிமுகவிற்கு கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

ஆனாலும் பாஜகவின் அழுத்தத்திற்கு பணியாத அதிமுக சசிகலாவை கட்சியில் சேர்த்துக் கொள்வதில்லை என்பதில் உறுதியாக இருந்தது. இதற்காகவே சமீபகாலமாக அடிக்கடி தமிழகம் வந்து சென்றிருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா என்ற ஒரு செய்தியும் வந்தது.திமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் கூட எதிர் வரும் சட்டசபை தேர்தலில் திமுகவை முழுமையாக வேறு இருக்க வேண்டுமென்றால் அதிமுக மற்றும் சசிகலா இருவரும் ஒன்றிணைய வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி நினைக்கின்றது. அதற்காக தான் பாஜக தரப்பில் இது தொடர்பாக அதிமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது.

இதற்கிடையில் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் சசிகலா தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியானது அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது நான் அரசியலில் இருந்து முழுமையாக விலகுகிறேன் நான் எப்பொழுதும் அதிகாரம் போன்றவற்றிற்கு ஆசைப்பட்டது கிடையாது அரசியலில் இருந்து ஒதுங்கி அம்மா அவர்களின் ஆட்சி அமைக்க பாடுபடுவேன் என்று தெரிவித்திருக்கின்றார்.

சசிகலாவின் இந்த திடீர் அறிவிப்பு அவர் ஆதரவாளர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. சசிகலாவின் இந்த அறிவிப்பிற்கு பின்னால் என்ன இருக்கிறது என்று யோசிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

அதேவேளையில், சசிகலாவின் இந்த அறிவிப்பிற்கு பின்னால் பாரதிய ஜனதா கட்சி இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஏனென்றால் சசிகலா தன்னை முழுநேர அரசியலில் ஈடுபடுத்திக்கொண்டால் நிச்சயமாக அது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கும் ஒரு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருக்கும் என்று சொல்கிறார்கள். அதன் காரணமாகத்தான் அதிமுகவில் அவரை இணைப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தயக்கம் காட்டி வருவதாக சொல்கிறார்கள்.

அதேவேளையில், தமிழகத்தில் திமுகவை எதிர்க்க சரியான பலமான கட்சி என்றால் அது அதிமுக தான். வேறு எந்த கட்சியாலும் திமுக என்ற கட்சியை முழுமையாக எதிர்த்து விட இயலாது என்று சொல்லப்படுகிறது. ஆகவே பாஜக தலைமையின் அறிவுறுத்தலின்படி தான் சசிகலா இவ்வாறு ஒரு முடிவை எடுத்தார் என்றும் சொல்லப்படுகிறது.

சசிகலா ஆரம்பம் முதலே தெரிவித்து வருவது என்னவென்றால் நம்முடைய எதிரி அதிமுக அல்ல திமுக என்பதுதான் அதேபோல அதிமுகவை சமீப காலமாக டிடிவி தினகரன் பெரிய அளவில் விமர்சனம் செய்வதில்லை எடப்பாடிபழனிசாமி பெரிய அளவில் குறை சொல்வது இல்லை யார் ஆட்சிக்கு வருவார்கள் என்று பத்திரிக்கையாளர்கள் அவரிடம் கேட்ட போதெல்லாம் மக்களின் மீது அக்கறை உள்ளவர்கள் ஆட்சிக்கு வரட்டும் என்ற பதிலைத்தான் அவர் கொடுத்திருக்கிறார் நேரடியாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி யையோ அல்லது துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சமீபகாலமாக அவர் விமர்சனம் செய்வது இல்லை.

இதெல்லாம் தெரிந்து கொண்ட பாஜக தலைமை சசிகலாவை அரசியலில் இருந்து ஒதுங்கி அதன்பிறகு திமுகவை வெல்வதற்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.சசிகலாவை பொறுத்தவரையில் திமுக என்பது அவருக்கு ஒரு மிகப்பெரிய எதிரி கட்சியாகவே பார்க்கப்படுகின்றது. அந்தவகையில் நாம் அரசியலில் இருந்து ஒதுங்கினாலும் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்ற ஒரே எண்ணத்தில் தான் அவர் இவ்வாறு ஒரு முடிவை எடுத்திருப்பார் என்றும் சொல்கிறார்கள்.

ஆனால் எதிர்காலத்தில் இப்படி ஒரு முடிவை அதிமுக எடுக்குமா என்பது தெரியவில்லை. ஒருவேளை எதிர்வரும் தேர்தலில் சசிகலாவின் இந்த முயற்சியால் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைத்தால் அதன்பிறகு சசிகலாவை அதிமுகவில் இணைத்துக் கொள்ள சம்மதம் தெரிவிப்பாரா எடப்பாடி பழனிச்சாமி என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

என்னதான் அதிமுக கட்சிக்குள் சசிகலா வரக்கூடாது என்று முதல்வரும், துணை முதல்வரும், கங்கணம் கட்டிக்கொண்டு நின்றாலும் நான் கட்சிக்குள் வரவில்லை அல்லது அரசியலில் இல்லை என்றாலும் பரவாயில்லை. அந்த கட்சி மட்டும் தோற்று விடக் கூடாது என்று இவ்வாறு ஒரு முடிவை சசிகலா எடுத்திருப்பது அரசியலில் அவருக்கு இருக்கும் அறிவு முதிர்ச்சி தான் காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.