சித்ராவின் வழக்கில் ஏற்பட்ட புதிய திருப்பம்!

0
102

சமீபத்தில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவருடைய கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என ரசிகர்களால் அறியப்பட்ட சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 9ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். நசரத்ப்பேட்டையில்
இருக்கின்ற தனியார் விடுதி ஒன்றில், அதிகாலை 3:00 மணி அளவில் தன்னுடைய கணவர் ஹேமந்த் ரவியுடன் தங்கியிருந்தபோது தற்கொலை செய்து கொண்டார் நடிகை சித்ரா.ஆனாலும் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை என்று பல தரப்பினரும் தெரிவித்து வந்தனர். ஆகவே இது கொலையா? அல்லது தற்கொலையா? என்று கேள்வி எழுந்த நிலையில், சித்ராவின் மரணத்திற்கு நீதி கேட்டு பலர் குரல் எழுப்பினர்.

இதற்கிடையே கடந்த காலங்களில் ஹேமந்த் செய்த மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது. ஆனாலும் அவருக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி அவர் எளிதாக அதிலிருந்து வெளி வந்துவிடலாம் என்று தெரிவிக்கப்பட்டது. சித்ராவின் தற்கொலை வழக்கை இணை ஆணையர் மகேஸ்வரி மேற்பார்வையில் துணை ஆணையர், மற்றும் ஆய்வாளர் விஜயராகவன் உள்ளிட்டோர் குழு மிகத் தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில், ஹேமந்த் மீதான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்களை திரட்டுவதற்கு உதவியாக இருந்திருக்கின்றது. இதனை அறிந்து கொண்ட ஹேமந்த் சில பெரிய தலைகள் மூலமாக அழுத்தம் கொடுத்தார் என்று தகவல்கள் வெளியான சமயத்தில், அரசியல் பின்புலத்தை வைத்து ஹேமந்த் தப்பிக்க முயற்சி செய்கின்றாரா? என்கின்ற ரீதியில் செய்திகள் உலா வர தொடங்கின.

இந்த நிலையிலே, சென்ற ஆறு தினங்களாக ஹேமந்த் இடம் தீவிரமாக விசாரணை செய்து வந்த காவல்துறையினர், நேற்று இரவு அவரை கைது செய்து இருக்கிறார்கள் சித்ராவுடைய நடத்தையில் சந்தேகப்பட்டு, அவருடன் ஹேமந்த் தகராறு செய்தது விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, ஆகவே தற்கொலைக்கு தூண்டியதாக ஹேமந்த் ஐபிசி 306ன் கீழே கைது செய்யப்பட்டு பொன்னேரி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றார்.

இதற்கிடையே, நடிகை சித்ராவின் தந்தை காமராஜ், தாயார் விஜயா, சகோதரி சரஸ்வதி, உள்ளிட்டோர் ஆர்.டி.ஓ விசாரணைக்காக நேற்றைய தினம் ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ முன்பாக ஆஜராகி இருக்கிறார்கள். அந்த சமயத்தில் சித்ராவிற்கு ஹேமந்த் குடும்பத்தின் தரப்பில் வரதட்சனை கொடுமை போல ஏதாவது தொந்தரவுகள் தரப்பட்டதா? என்ற விதத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்த நடிகை சித்ராவின் தாயார் விஜயா அவர்கள் சித்ரா உடைய மரணத்திற்கு ஹேமந்த் தான் காரணம் எனவும், சித்ராவிற்கு எந்த மன அழுத்தமும் கிடையாது, வரதட்சனை கொடுமை கொடுத்தார்களா அல்லது இல்லையா என்பது தொடர்பாக சித்ராவிற்கு தான் தெரியும் என தெரிவித்தார் இந்த நிலையிலே ஹேமந்த் குடும்பத்தினர் விசாரணைக்கு ஆதரவாக இருந்த நிலையில் நேற்று இரவு ஹேமந்த் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.