நடிகர் விஷாலின் தேர்தல் வியூகம் இதுதான்!

0
71

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு ஆக்ஷன் மற்றும் அயோக்கியா புகைப்படங்கள் வெளியானது அதனைத் தொடர்ந்து துப்பரிவாளன் 2 மற்றும் போன்ற படங்கள் தயாராகி வருகின்றன சக்ரா திரைப்படம் முழுமையாக முடிந்து விட்ட நிலையில் ஓ.டி.டி வெளியீட்டிற்கு தயார் ஆகி விட்டது.

ஒரு நடிகராக இருந்த வந்த நேரத்திலேயே திரைத்துறை சங்கங்களில் தன்னை இணைத்துக்கொண்ட விஷால் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிகளில் இருந்து வருகின்றார். பதவிகளில் இருந்த போது நடிகர் சங்க கட்டிடம் தொடர்பான பணிகள் என்று பலவற்றை செய்வதாக வாக்குறுதிகளை அள்ளி கொடுத்தார் விஷால் இந்த நிலையிலே விஷால் ரசிகர் மன்றத்தை விஷால் மக்கள் நல இயக்கம் என்று மாற்றினார், அதற்கு கொடியையும் அறிமுகப்படுத்தினார்.

அதேபோல ஆர்.கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல் நடந்த போது அவரும் வேட்பு மனு தாக்கல் செய்தார், ஆனாலும் அவருடைய வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் காரணமாக போட்டியிடாமல் நின்றுவிட்டார் இப்போது தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் நிர்வாகிகள் நியமனம் செய்து இருக்கின்ற விஷால், வர இருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிட தன்னையும் தன் இயக்கைத்தையும் தயார்படுத்தி வருகிறார் என்று தெரிவிக்கப்படுகின்றது. அதற்காக நிர்வாகிகளுடன் ஆலோசனை சமீபத்தில் நடைபெற்றது. கடந்த சில வாரங்களில் ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவருமே சட்டசபை தேர்தலுக்காக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வரும் சமயத்தில், விஷாலின் இந்த ஆலோசனைக் கூட்டமும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

இவ்வாறான நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடலாம் என யோசனை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு எந்த தொகுதியில் விஷால் நிறுத்தப்பட்டால் நிச்சயமாக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது, என்பது தொடர்பாக பேசியிருக்கிறார்கள். ஏனென்றால் பெரிய அரசியல் கட்சி தலைவர்கள் நிற்காத ஒரு தொகுதியை தேடி பிடித்து தன்னுடைய நிர்வாகிகளுக்கு அமைதியான உத்தரவையும் போட்டிருக்கிறார் நடிகர் விஷால். ஆனாலும் பேச்சுவார்த்தை மட்டுமே நடந்ததாகவும் எந்த ஒரு இறுதி முடிவையும் எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ரஜினி-கமல் வரிசையில் விஷாலும் இந்த சட்டசபை தேர்தலில் களமிறங்க இருக்கும் காரணத்தால், அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பு நிலவி வருகின்றது.