Connect with us

Breaking News

விஜய்க்கு வில்லன் ஆகிறாரா விஷால்?.. தீயாய் பரவும் தகவல்!

Published

on

விஜய்க்கு வில்லன் ஆகிறாரா விஷால்?.. தீயாய் பரவும் தகவல்!

விஜய் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் பல வில்லன்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து அவர் வம்சி இயக்கும் புதிய படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் தளபதி 67 என்ற திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

இந்த படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் தயாரிக்க, அனிருத் இசையமைப்பார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் இருவரும் மாஸ்டர் என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்துள்ளனர். சமீபத்தில் லோகேஷ் இயக்கிய விக்ரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது.

Advertisement

தற்போதே வாரிசு திரைப்படத்தை விட இந்த தளபதி 67 படத்துக்குதான் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் சஞ்சய் தத், இயக்குனர் மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் இப்போது படத்தின் பிரதான வில்லன் வேடத்தில் நடிக்க நடிகர் விஷாலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லோகேஷ் தான் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைத்தார். அந்த கதாபாத்திரம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனால் அவர் படங்களின் வில்லன் கதாபாத்திரங்கள் பெரியளவில் கவனிக்கப்படுகின்றன.

Advertisement

விஷால் தற்போது லத்தி மற்றும் மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement