Connect with us

Cinema

மீண்டும் படப்பிடிப்புத் தளத்தில் காயமடைந்த விஷால்… மருத்துவமனையில் அனுமதி!

Published

on

மீண்டும் படப்பிடிப்புத் தளத்தில் காயமடைந்த விஷால்… மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் விஷால் தற்போது மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.

Advertisement

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருந்தார். ஆரம்பத்தில் இவர் தொட்டதெல்லாம் ஹிட்டானது. இவர் நடித்த செல்லமே, தாமிரபரணி, சண்டைக்கோழி ,மருது மற்றும் துப்பறிவாளன் போன்ற படங்கள் ஹிட் கொடுத்தது ஆனால் ஒரு கட்டத்தில் டெம்ப்ளேட் படங்களில் சிக்கிக் கொண்டதால் அடுத்தடுத்து தோல்வி படங்களைக் கொடுத்து வருகிறார். கடைசியாக இவரின் ஹிட் படமாக இரும்புத்திரை திரைப்படம் அமைந்தது.

இந்நிலையில் எப்படியாவது ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் விஷால் இப்போது லத்தி மற்றும் மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். துப்பறிவாளன் 2 என்ன நிலைமையில் இருக்கிறது என்பது தெரியவில்லை. இந்நிலையில் அவரின் அடுத்த ரிலீஸாக லத்தி திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

லத்தி படத்தின் படப்பிடிப்பை முடித்த விஷால் தற்போது மார்க் ஆண்டனி படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்துக்காக சென்னைக்கு அருகில் ஒரு கல் குவாரியில் சண்டைக் காட்சியைப் படமாக்கியுள்ளனர். அப்போது விஷாலுக்கு கால் மற்றும் கை ஆகிய பகுதிகளில் பலத்த அடி பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளன. ஏற்கனவே லத்தி படத்தில் நடிக்கும் போதும் விஷாலுக்கு காயம் ஏற்பட்டது. இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Advertisement