கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள்!!

0
76
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!

கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உஷாராக செயல்பட வேண்டிய நாள். அஷ்டம ராசியில் சந்திர பகவான் இருப்பதால் குழப்பங்கள் வந்து சேரும். வாகனப் பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது. நிதி வருவதற்கு பிரச்சனை உள்ளது.

கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது. புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவியிடையே சிறு சிறு குழப்பங்கள் வந்து சேரலாம். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்கள் மற்றும் பகைமை வேண்டாம்.

உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில இன்னல்கள் இடையூறுகள் வரலாம் என்பதால் கூடுமானவரை கூட்டாளிகளையும் வாடிக்கையாளர்களையும் அனுசரித்து செல்வது அவசியம்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு வீண் பலி வந்து சேரலாம். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில பிரச்சனைகள் உள்ளது.

அரசியல்வாதிகள் அமைதியாக செயல்படுவது நல்லது. கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேர்வதில் கால தாமதம் ஆகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது அவசியம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரியம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.