கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள்!

0
119
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!

கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள்!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள். ராசிக்குள் சந்திராஷ்டமம் இருப்பதால் பேசும் வார்த்தைகளில் எச்சரிக்கை உடன் இருப்பது நல்லது.

குடும்ப உறவுகளின் சிறு சிறு பிரச்சனைகள் வரும் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமை குறைய வாய்ப்பு உள்ளதால் பேசும் வார்த்தைகளில் நிதானமாக இருப்பது நல்லது.

வருமானம் வந்த சேர்வதில் காலதாமதம் ஆகும். உத்தியோகத்தில் வீண் அலைச்சல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில சங்கடங்கள் வந்து சேரும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் அமைதியாக செயல்பட வேண்டும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. மருத்துவச் செலவுகளில் கவனமாக இருப்பது நல்லது.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை வர வேண்டும் என்றால் கடுமையாக பாடுபட வேண்டி வரும். மூத்த வயதில் உள்ள நண்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது அவசியம். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்கள் எந்த ஒரு காரியத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
CineDesk