கன்னி ராசி – இன்றைய ராசிபலன் !! பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!!

0
102
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!

கன்னி ராசி – இன்றைய ராசிபலன் !! பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள். இன்று சுபஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது

குடும்ப உறவு பெரிதளவில் நன்மை கிடையாது. கணவன் மனைவி இடையே சிறப்பான ஒற்றுமை உள்ளது. பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் என்றாலும் செலவுகள் வந்து சேரும். உத்தியோகத்தில் பணியிடமாறுதல் சிலருக்கு உருவாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படும்.

அரசியலில் இருக்கும் அன்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வெளியூர் கலை நிகழ்ச்சிகள் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்து மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உற்றார் உறவினர்கள் மூலம் சில நன்மைகள் கிடைக்க பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது அவசியம்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலைகள் நிலவும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது‌ நல்லது. வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குரு பகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
CineDesk