கோலி ஆசியக்கோப்பையில் அதை நிச்சயம் செய்வார்… பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து

0
61

கோலி ஆசியக்கோப்பையில் அதை நிச்சயம் செய்வார்… பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவாக பிசிசிஐ தலைவர் கோலி பேசியுள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோஹ்லி குறித்த விமர்சனங்கள் பல்வேறு தரப்பில் இருந்து வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம் கோஹ்லி கடந்த 2 ஆண்டுகளாகவே மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் (100 இன்னிங்ஸ்களுக்கு மேல்) ஆகிவிட்டன. விரைவில் அவர் மீண்டும் பழைய கோலியாக திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

இதன் காரணமாக அவர் ஃபார்மை மீட்டெடுக்க சில தொடர்களில் ஓய்வளிக்கப்பட்டு வருகிறது. தற்போது நடந்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலும் அவர் விளையாடவில்லை. ஆனால் அடுத்து நடக்க உள்ள ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் அவர் களமிறங்குமார் என எதிர்பார்க்கபப்ட்டது. ஆனால் அதிலும் அவர் இடம்பெறவில்லை.

இதையடுத்து ஆசியக்கோப்பை தொடரில் கோலிக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் அடுத்து நடக்கும் டி 20 உலகக்கோப்பை தொடருக்கு ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களே உலகக்கோப்பை தொடரில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலி கோலி குறித்து “இந்திய அணியின் மிகச்சிறந்த வீரர்களில் கோலி ஒருவர். அவர் அணிக்காக சேர்த்துள்ள ரன்களை நாம் மறக்க முடியாது. மீண்டும் அவர் தன் பழைய ஆட்டத்துக்கு திரும்பி சதங்களை எடுப்பார் என நம்புகிறேன். அவர் இந்த ஆசியக் கோப்பை தொடரிலேயே பார்முக்கு மீண்டு வருவார்” என நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசியுள்ளார்.