நாளை மறுநாள் தொடங்கும் இந்தியா தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! தொடரை வெல்லுமா இந்திய அணி?

0
86

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை மறுநாள் ஆரம்பிக்க இருக்கிறது.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7881 ரன்களை சேர்த்திருக்கிறார். தற்போது வரையில் 27 சதங்கள், 27 அரை சதங்கள், உள்ளிட்டவற்றை அவர் அடித்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு எதிராக நடைபெற இருக்கும் தொடரில் 199 ரன்கள் எடுத்தால் 8000 ரன்கள் எடுத்த 6-வது இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைக்க முடியும். இதுவரையில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர், விவிஎஸ் லக்ஷ்மன் மற்றும் சேவாக் உள்ளிட்டோர் முதல் ஐந்து இடத்தில் இருக்கிறார்கள்.

இதுவரையில் 27 சதம் அடித்திருக்கிற விராட் கோலி மேலும் ஒரு சதம் அடித்தால் ஸ்டீவ் ஸ்மித், ஆலன் பார்டர், கிரீம் ஸ்மித் உள்ளிட்டோரை பின்னுக்குத்தள்ளுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

ஆனால் இந்திய அணியைப் பொறுத்தவரையில் இந்த போட்டியில் இன்னும் ஒரு மிகப்பெரிய பொறுப்பு காத்திருக்கிறது. அதாவது தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரையில் இந்திய அணி ஒரு தொடரில் கூட வெற்றி பெற்றது கிடையாது, இது காலம் காலமாக நடைபெற்று வருகிறது.

தென்ஆப்பிரிக்க ஆடுகளங்களை பொறுத்தவரையில் இந்திய பவுலர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் உள்ளிட்ட எல்லோருக்கும் பாதகமான சூழ்நிலை தான் எப்போதும் இருக்கும், இது பல சமயங்களில் வெளிப்பட்டிருக்கிறது.

ஆகவே விராட் கோலி சதம் அடிப்பது ஒரு புறம் இருந்தாலும் இன்னொரு புறம் எப்பாடுபட்டாவது இந்தமுறை தென்னாப்பிரிக்க மண்ணில் வெற்றிக்கனியை பறித்து விட வேண்டும் என்பதே இந்திய அணியின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.