கேப்டனாக விராத் கோஹ்லி செய்த சாதனை: குவியும் பாராட்டுக்கள்

0
64

கேப்டனாக விராத் கோஹ்லி செய்த சாதனை: குவியும் பாராட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராத் கோஹ்லி கடந்த 2014ஆம் ஆண்டு பொறுப்பேற்ற நிலையில் இந்த ஐந்து ஆண்டுகளில் கேப்டனாக மட்டும் 5000 ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை பெற்றுள்ளார். மேலும் சர்வதேச அளவில் 5000 ரன்களுக்கும் மேல் எடுத்த கேப்டன்களில் 6வது இடத்தில் விராத் கோஹ்லி உள்ளார்

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இன்று வரை கேப்டனாக மட்டும் 53 டெஸ்ட் போட்டிகளில் 86 இன்னிங்ஸ் விளையாடிய விராத் கோஹ்லி, 5027 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 19 சதங்கள், 13 அரைசதங்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இதற்கு முன்னர் 5000 ரன்கள் கடந்த வீரர்களின் பட்டியல்

தென்னாப்பிரிக்காவின் ஸ்மித்: 8659 ரன்கள்
ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர்: 6623 ரன்கள்
ஆஸ்திரேலியாவின் பாய்ண்டிங்: 6542 ரன்கள்
மேற்கிந்திய தீவுகளின் லாயிடு: 5233
நியூசிலாந்தின் பிளம்மிங்: 5156

புதிய சாதனை செய்த இந்திய வீரர் விராத் கோஹ்லிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் மேற்கண்ட ஐந்து வீரர்களும் தற்போது ஓய்வு பெற்றுவிட்டதால் இன்னும் 1000 ரன்கள் எடுத்தாலே விராத் கோஹ்லி இரண்டாவது இடத்தை பிடித்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது

author avatar
CineDesk