நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய விராட் கோலி! முதல் இன்னிங்ஸில் அசத்தல்! 

0
229
#image_title

நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய விராட் கோலி! முதல் இன்னிங்ஸில் அசத்தல்! 

ஆஸ்திரேலியா இந்தியா இடையே நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி அசத்தியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு போட்டிகளில் இந்தியாவும், ஒரு போட்டியில் ஆஸ்திரேலியாவும் வென்றுள்ளது. இதையடுத்து இந்த டெஸ்ட் தொடரில் விளையாடி இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதையடுத்து 4- வது டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 480 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி இன்று 4-வது நாள் ஆட்டம் முடிவில் 178.5 ஓவரில் 572 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில் இந்த போட்டியில் நீண்ட நாட்களுக்கு பின்னர் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தனது சதத்தை பதிவு செய்தார். இந்த இன்னிங்ஸில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் சதம் அடித்தார். அதேபோல் மறுபுறம் விராட் கோலி பொறுமையாக நிலைத்து நின்று விளையாடினார்.

விராட் கோலி சுமார் 1206 நாட்களுக்குப் பிறகு தனது 28-வது  சதத்தை டெஸ்ட் போட்டியில் விளாசி உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் சதம் அடித்து அசத்தினார்.

இந்நிலையில் இந்த போட்டியில் சதம் அடிப்பாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் சுமார் 1,206 நாட்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது சதத்தை பதிவு செய்துள்ளார். சர்வதேச அரங்கில் விராட் கோலியின் 75வது சதமாகும். இதையடுத்து இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 186 ரன்களுக்கு கடைசி விக்கெட் ஆக விராட் கோலி அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.