கிண்டுவதோடு சேர்ந்து கிண்டலும் வருமா? கவிஞர் வைரமுத்துவின் நக்கல்!

0
82

நோய்தொற்று இரண்டாவது அலை பல முக்கிய ஆட்களை தாக்கியிருக்கிறது தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதில் முக்கியமானவராக பார்க்கப்படும் பேராசிரியர் ஹாஜா கனியை சில தினங்களுக்கு முன்பு இந்த நோய்த்தொற்று பற்றிக்கொண்டது.

பல நண்பர்கள் அவருக்கு தொலைபேசி மூலமாக ஆலோசனைகளை தெரிவித்தும்,விரைவில் நலம் பெற வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். பேராசிரியர் நெருக்கமான நண்பர் கவிஞர் வைரமுத்துவும், அவருக்கு தொலைபேசி மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். அப்போது அடிக்கடி ஆவி பிடிக்க சொல்லி அறிவுரை கூறிய வைரமுத்து ஆவி பிடிப்பது பற்றி கிராமிய முறைப்படி விளக்கம் கூறினார்.

அந்த சமயத்தில் ஆவி பிடிப்பதற்கு மஞ்சள்தூள், வேப்பங்கொழுந்து, நொச்சி இலை, இவற்றை கொதிக்க விடும் சமயத்தில் அடுப்பில் 2 செங்கல் துண்டுகளை போடுங்கள் ஆவி பிடிக்கும் சமயத்தில் செங்கல் துண்டுகளை பாத்திரத்தில் போடுங்கள் அது மூலிகை பலன்களை தங்களுக்கு அளிக்கும் என்று தெரிவித்த வைரமுத்து, அதற்கு பின்னர் தன்னுடைய நக்கல் பேச்சாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உதவாத செங்கல் எதற்காவது உதவும் என்று தெரிவிக்க இருவரும் சிரித்து விட்டனராம்.

அதோடு கிராமத்து வழக்கங்களை விளக்கம் வைரமுத்து இந்த ஆவி பிடிக்கும் முறை தொடர்பாக, தன்னிடம் கூறியதை தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்து இது எல்லோருக்கும் உதவட்டும் என்று பதிவிட்டிருக்கிறார் பேராசிரியர் ஹாஜாகனி.