மன்றாடிக் கேட்கிறோம் மண் தொழிலை காப்பாற்று! சட்டசபையை நோக்கி வந்த விநாயகர் சிலை!

0
77

தமிழக அரசு நோய்தொற்று பரவலை காரணமாக காட்டி பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், அவற்றை கரைப்பதற்கும், தடை விதித்து கட்டுப்பாடுகளை அறிவித்து இருக்கிறது. நேற்று இது குறித்து அறிவிப்பை வெளியிட தமிழக அரசு இவ்வாறு தெரிவித்தது. இந்து முன்னணி தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தடைகளை மீறி விநாயகர் சிலைகளை நிறுவுவோம் என்று அறிவித்து உள்ளது.

இந்த சூழ்நிலையில், தான் இன்றைய தினம் தமிழக சட்டசபையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்து கலைவாணர் அரங்கத்திற்கு வெளியே இருக்கின்ற சாலையில் தர்ணா போராட்டம் செய்தார்கள். அவர்களை கைது செய்து சாலையை சுத்தப்படுத்திய சிறிது நேரத்தில் வாலாஜா சாலை மறுபடியும் பரபரப்பானது.

இன்று பகல் 12 30 மணி அளவில் திடீரென்று வாலாஜா சாலையில் விநாயகர் சிலைகளை எடுத்துக் கொண்டு ஒரு குழுவினர் கூட்டமாக வருகை தர காவல்துறையினர் பதற்றம் அடைந்து போனார்கள். அவர்களுடைய கையில் விநாயகர் சிலைகளும் மன்றாடிக் கேட்கின்றோம் தங்கள் தொழிலை காப்பாற்றுகின்ற பதாகைகளும் இருந்ததாக சொல்லப்படுகிறது.

சட்டசபையை நோக்கி வந்த அந்த குழு தமிழக கைவினை காகித கூழ் விநாயகர் சிலைகள், களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர் நல சங்கத்தினர் தமிழக அரசின் நோய்தொற்று கட்டுப்பாடுகளால் விநாயகர் சிலைகள் தயாரிப்பு விற்பனை செய்வது உள்ளிட்ட தடைகளையும், இடையூறுகளையும், உண்டாக்கியிருக்கிறது. சென்ற வருடம் ஏற்பட்ட தொழில் முடக்கம் பொருளாதார இழப்பு போன்றவற்றின் காரணமாக. மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கின்ற சூழ்நிலையில், கைவினை கலைஞர்கள் களிமண் பொம்மை தயாரிப்பாளர்களுக்கு நலன் காக்க நல வாரியம் அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நோய்த்தொற்று பாதிப்பால் எங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற வருமானத்திற்கு நிவாரணம் கொடுக்க வேண்டும் சென்ற ஆண்டைப் போல தொழில் செய்யும் தொழில் கூடங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை இந்த அரசு முற்றிலுமாக நிறுத்த வேண்டும் நாங்கள் உற்பத்தி செய்யும் பொம்மைகள் கைவினை பொருட்களை அரசே கொள்முதல் செய்து நியாயமான விலையில் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

விநாயகர் சிலைகள் மற்றும் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ய இயலாத சூழ்நிலையில், எங்களுடைய வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தான் தமிழக சட்டசபையை நோக்கி திரண்டு வந்தார்கள் அந்த பொம்மைகள் தயாரிப்பாளர் சங்கத்தினர்.அத்துடன் அவர்கள் விநாயகர் சதுர்த்தி இல்லை என்றால் எங்களுக்கு வாழ்க்கையை கிடையாது வழிகாட்டு நெறிமுறைகள் உடன் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு அனுமதி தாருங்கள். எங்கள் வாழ்வாதாரம் சென்ற வருடமும் இல்லாத நிலையில், இந்த வருடமும் இல்லாமல் செய்து விடாதீர்கள் என்று கோரிக்கை வைத்தார்கள்.

இருந்தாலும் எந்த விதமான அனுமதியும் இன்றி சட்ட சபையை நோக்கி விநாயகர் சிலையுடன் ஊர்வலமாக பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் வருகை தந்தால் அதிர்ந்து போன காவல்துறையினர் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றார்கள். அதிமுகவினர் போராட்டம் நடத்தியதையடுத்து விநாயகர் சிலை ஊர்வலம் போன்றவற்றால் சட்டசபை அமைந்திருக்கும் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.