சர்க்கரை நோயா? வில்வ இலையை இந்த மாதிரி செய்து சாப்பிடுங்கள்! நோய் பறந்துடும்

0
424
Vilva Leaves
Vilva Leaves

சர்க்கரை நோயா? வில்வ இலையை இந்த மாதிரி செய்து சாப்பிடுங்கள்! நோய் பறந்துடும்

வில்வ இலையானது சிவ பெருமானுக்கு உகந்தது என்று அனைவரும் அறிவர்.குறிப்பாக வில்வ இலையானது சிவனாகவும்,முட்களானது சக்தியாகவும்,கிளைகள் வேதங்கள் என்றும், வேர்கள் யாவும் முக்கோடி தேவர்கள் என்றும் கருதபடுகிறது.இவ்வளவு சிறப்புமிக்க இந்த வில்வ இலையானது நமது உடலுக்கும் பல்வேறு நன்மைகளை செய்கிறது.

இறைவனுக்கு உகந்த இந்த வில்வ இலை மூலிகையாகவும் பயன்படுகிறது.வில்வ இலை உடலில் உள்ள தாதுக்களை ஊக்குவிக்கிறது. இது உடலுக்கு ஊக்கத்தையும்,பொலிவையும் அளிக்கிறது.ஆண்களுக்கு ஏற்படும் தாது நஷ்டத்தை போக்கி உடலுக்கு வலிமையை தருகிறது.அதே நேரத்தில் இந்த வில்வ இலையை முறையாக சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகும் என்றும் கூறப்படுகிறது.

தேவையான பொருட்கள்:

வில்வ இலை – 1 கப் அல்லது பொடி 15 கிராம்

தக்காளி – 1

வெங்காயம் – 1

கொத்தமல்லி – சிறிது

இஞ்சி மற்றும் பூண்டு – சிறிது

மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்

சீரகத்தூள் – 1 டீஸ்பூன்

கம்பு மாவு – 2 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம்,தக்காளி,இஞ்சி ,மற்றும் பூண்டு உள்ளிட்டவைகள மேலே குறிப்பிட்ட அளவில் எடுத்து நன்றாக நறுக்கி கொள்ளவும்.அடுத்ததாக வில்வ இலையுடன் போதுமான அளவிற்கு தண்ணீர் கலந்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.

அடுத்து கம்பு மாவை மேலே கூறிய அளவில் எடுத்து இந்த தண்ணீருடன் கலந்து நன்றாக கலக்கவும்.அடுத்து கொதி நிலையில் ஏற்கனவே குறிப்பிட்ட அந்த நறுக்கிய காய்கறிகளை இதனுடன் சேர்க்கவும்.இவற்றையெல்லாம் சேர்த்த பின்பு மசித்து சூடு ஆறும் முன்பாக வடிகட்டி கொள்ளவும்.பின்னர் இதனுடன் உப்பு,மிளகுத்தூள்,சீரகத்தூள் மற்றும் எலுமிச்சை சாறை கலந்து பரிமாறவும்.மேற்கூறிய வகையில் சாப்பிடும் போது சர்க்கரை வியாதி காணாமல் போய்விடும்.

பயன்கள்:

இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது கூடுவதால் உடலில் நீரிழிவு நோயானது ஏற்படுகிறது.இந்த வில்வ இலையானது சர்க்கரை நோயை கட்டுபடுத்த உதவுகிறது.இந்த வில்வ இலையை பயன்படுத்தி செய்த டீ குடிப்பதால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்து கொள்ளலாம்.

காய்ச்சல் உள்ளவர் இந்த வில்வ இலையை சாப்பிட்டால் உடனடியாக குணமாகும்.

இந்த வில்வ இலையானது அனீமியா நோய்க்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

மேலும் வில்வ இலை மஞ்சள் காமாலையை குணப்படுத்தவும் பயன்படுகிறது.

குறிப்பாக இது சீதபேதியை குணப்படுத்தவும் பயன்படுகிறது.

காலரா நோய் வராமலும் இந்த வில்வ இலை நம்மை பாதுகாத்து கொள்ளும்.

பக்க விளைவுகள்:

இந்த வில்வ இலையால் இவ்வளவு பயன்கள் இருந்தாலும் சிலருக்கு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

அதனால் கருத்தரித்த பெண்கள் எக்காரணம் கொண்டும் வில்வ இலையை சாப்பிட கூடாது.

அதேபோல ஏற்கனவே சர்க்கரை நோய்க்கு மருந்து சாப்பிடும் நபர்கள் மருத்தவரின் ஆலோசனை இல்லாமல் வில்வ இலையை சாப்பிட கூடாது.