யாரால் வந்தது இப்படி ஒரு அவல நிலை! மருத்துவர் ராமதாஸ் வேதனை!

0
68

கொரோனா தொற்று சீனாவில் புதிதாக உருவான சமயத்திலும் சரி, உலக நாடுகள் மத்தியில் அந்த நோய் பரவ தொடங்கிய சமயத்திலும் சரி, நம்முடைய இந்திய நாட்டில் அந்த பயமே இல்லாமல் சிறிது காலம் இருந்தோம். அதோடு அந்த நோய் இங்கு வருவதற்கான சாத்தியமே இல்லை என்ற சூழ்நிலையும் இருந்தது.அதையும் மீறி கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவிற்குள் ஊடுருவியது.

இந்த நோய். அப்போதும் இந்த நோயினால் மத்திய, மாநில அரசுகள் எடுத்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக, பெரிய அளவில் இந்தியாவில் பரவ முடியாத நிலை இருந்தது.இந்த சூழ்நிலையில், தற்சமயம் இந்த நோயினால் பாதித்த நாடுகளில் முதல் இடத்தில் இருக்கிறது இந்தியா.

இந்த நிலை ஏற்பட்டதற்கு காரணம் மக்களுடைய அலட்சியம் தான் என்பது மறுக்க முடியாத உண்மை.இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இதுதொடர்பாக தெரிவித்திருப்பதாவது,இந்தியாவில் தினசரி தொற்று பாதிப்பு 3 லட்சத்து 16 ஆயிரம் என்ற உச்சத்தை அடைந்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கிறார்கள். இந்த நோய்த் தொற்று பாதிப்பும் , உயிரிழப்பும், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த வைரஸ் பரவலுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முதல் காரணம் என்னவென்றால் மக்கள் தான் என்பதை யாராலும் மறுத்து விட முடியாது. மக்கள் அனைவரும் முக கவசம் அணிவது போன்ற விதிமுறைகளை பின்பற்றினால் அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் இந்த தொற்று பரவலை நாம் கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும் என்று தெரிவித்து இருக்கிறார். ஆனால் அதனை மக்களாகிய நாம் செய்வதில்லை அதன் காரணமாக தான் இன்று உலகிலேயே மிக அதிக அளவில் இந்த பாதிப்பிற்கு உள்ளான நாடாக இந்தியா மாறி இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால் இப்போதும் கூட நிலைமை நம் கையை விட்டு சென்று விடவில்லை தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியேறுவது போன்ற செயல்களை தவிர்த்திடுங்கள், வெளியே செல்லும் சமயத்தில் முக கவசம் அணிந்து செல்லுங்கள் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் வீட்டை விட்டு வெளியே சென்று வந்த பின்னர் கைகளை சுத்தம் செய்யுங்கள் பாதுகாப்பு விதிமுறைகளை நாம் முறையாகப் பின்பற்றினால் நிச்சயமாக இந்த பாதிப்பில் இருந்து நான் மீண்டு வந்து விட முடியும் என்று தெரிவித்திருக்கிறார்.