பாமக எடுத்த முடிவால் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திடம் தஞ்சமடைந்த நிர்வாகிகள்

0
97
CV Shanmugam ADMK
CV Shanmugam ADMK

பாமக எடுத்த முடிவால் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திடம் தஞ்சமடைந்த நிர்வாகிகள்

தமிழகத்தில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதாவது புதியதாக பிரிக்கப்பட்ட வேலூர், விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் இந்த தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனையடுத்து திமுக மற்றும் அதிமுக கட்சிகள் அதன் கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.இதில் திடீர் திருப்பமாக அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது.இதனையடுத்து இரு கட்சி நிர்வாகிகளும் மாறி மாறி விமர்சிக்க தொடங்கினர்.

நிலைமையை உணர்ந்த இரு கட்சி தலைமையும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராகினர்.இதனையடுத்து இரு கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட பேச்சு வார்த்தையில் உள்ளாட்சி தேர்தலில் கீழ் நிலையில் உள்ள பதவிகளுக்கு மட்டுமே பாமக தனித்து போட்டியிடுவதாகவும்,மற்ற பதவிகளுக்கு அதிமுகவை ஆதரிப்பதாகவும் அறிவிப்பு வெளியானது.

இவ்வாறு கட்சி மேலிடத்தில் உடன்பாடு ஏற்பட்டாலும் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்ட அந்த சல சலப்பு குறையவில்லை.இதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் பாமகவை சேர்ந்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சிவி சண்முகம் தலைமையில் அதிமுகவில் இணைந்துள்ளனர்.நிர்வாகிகளின் இந்த முடிவு பாமக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.