விக்ரம் பா ரஞ்சித் படத்தில் ஜி வி பிரகாஷ்குமார்… வெளியான பூஜை புகைப்படங்கள்!

0
53

விக்ரம் பா ரஞ்சித் படத்தில் ஜி வி பிரகாஷ்குமார்… வெளியான பூஜை புகைப்படங்கள்!

விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கும் படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு விக்ரம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மாரடைப்பு என வதந்திகள் பரவின. ஆனால் வெறும் வாயுப்பிடிப்பு என்று அவரது தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனால் அவர் நடித்த பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் கூட அவர் கலந்துகொள்ளவில்லை.

இதையடுத்து மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய விக்ரம் நேற்று நடைபெற்ற கோப்ரா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டுள்ளார். விக்ரம் உடன் அவர் மகன் துருவ்வும் கலந்துகொண்டார். இந்நிலையில் இன்று விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் ஞானவேல் ராஜா நடிக்கும் விக்ரம் 61 திரைப்படத்தின் பூஜை சென்னையில் நடந்துள்ளது.

இதில் விக்ரம், பா ரஞ்சித், ஞானவேல் ராஜா, ஆர்யா மற்றும் ஜி வி பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். முதல் முறையாக அவர் பா ரஞ்சித் படத்துக்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பூஜை முடிந்த நிலையில் விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது. பூஜைப் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.