பாலிவுட்டில் கால் பதிக்கும் தளபதி விஜய்யின் ஃபேவரட் இயக்குனர்! ஹீரோவாகும் பாலிவுட் கிங்!

தளபதி விஜய்யுடன் சேர்ந்து மெர்சல், தெறி, பிகில் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி.தற்போது பாலிவுட்டில் கால்பதிக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. அதனை உண்மையாக்கும் வகையில் அட்லி மும்பையில் முகாமிட்டுள்ளார். 

இயக்குனர் அட்லி இதுவரை இயக்கிய ராஜாராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன இருந்தாலும் அந்த படங்கள் ஏதோ ஒரு பழைய தமிழ் படத்தின்  இருந்து எடுத்து உருவாக்கப்பட்டது என்று விமர்சனம் எழுந்தது.  இருந்தாலும் அப்படங்கள் அனைத்தும் வெற்றியை அடைந்தன.இவர் விஜய்யின் ஃபேவரட் இயக்குனராகவும் மாறினார்.

மேலும் மேற்குறிப்பிட்ட படங்கள் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் இருந்து கதையை எடுத்து உருவாக்கப்பட்டதாகும் என்ற கருத்துகள் வெளியாயின. இதை எதையும் காதில் வாங்காத அட்லி அடுத்த கட்டத்திற்கு முன்னேறி உள்ளார்.

அவரின் வெற்றிக்கு பிறகு பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை வைத்து படம் இயக்க போவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்தப் படம் நடக்குமா நடக்காதா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இத்தனை நாட்களாக இருந்தனர். இப்போது அந்த குழப்பத்திற்கு ஒரு விடை கிடைத்துள்ளது.அந்த படத்தில் ஷாருக்கான் நடிப்பது உறுதியாகி உள்ளது.மேலும் அந்த படத்தின் டைட்டில் சங்கி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த படத்தில் ஷாருக்கானின் ஃபேவரிட் ஹீரோயின் தீபிகா படுகோன் நடிக்க உள்ளார் என்ற தகவல் கசிந்து வருகிறது.

இது உண்மையா இருந்தா நல்லா தான் இருக்கும் ! இந்த படத்தை ஆச்சும் காப்பி அடிக்காமல் பண்ணுங்க பாஸ்