கொரோனாவை ஒழிப்போம் மக்களை காப்போம்: தொண்டர்களுக்கு அறைகூவல் விடுத்த விஜயகாந்த்!

0
104

22.03.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு கொரோனாவை ஒழிப்போம் மக்களை காப்போம் என்று கோஷம் எழுப்புவதன் மூலமாக நம் விழிப்புணர்வை தேசத்திற்கு தெரியபடுத்த வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திரமோடி அவர்கள் நேற்று (19.03.2020) தொலைக்காட்சியின் மூலமாக இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா விழிப்புணர்வுக்காக 22ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் விழிப்புணர்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக நாம் வரவேற்கிறோம். மக்கள் விழிப்புணர்வு பெற்று கொரோனா கொடிய நோயால் யாரும் பாதிப்படையாமல், முன்னெச்செரிக்கையோடு இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் அனைத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளுக்கும் மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

22.03.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு தங்களுடைய வீட்டு வாசலில் கைதட்டி மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கவேண்டும் என்று பாரத பிரதமர் கூறியுள்ளார். அதை தேமுதிக சார்பாக நாம் கடைபிடிக்கும் விதமாக அவரவர்கள் வீட்டு வாசலில் நின்று கை தட்டியும், டாக்டர்களுக்கு மனமார்ந்த நன்றியையும் தெரிவித்து, கொரோனாவை ஒழிப்போம், மக்களை காப்போம் என்று கோஷம் எழுப்புவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

author avatar
Parthipan K