தோல்விகளிலிருந்து மீட்டு தேமுதிகவை பலப்படுத்த விஜயகாந்த் எடுத்த புதிய வியூகம்

0
107
Vijayakanth Plan for Party Development-News4 Tamil Online Tamil News Channel1
Vijayakanth Plan for Party Development-News4 Tamil Online Tamil News Channel1

தோல்விகளிலிருந்து மீட்டு தேமுதிகவை பலப்படுத்த விஜயகாந்த் எடுத்த புதிய வியூகம்

தொடர் தோல்விகளை பெற்று வரும் தேமுதிகவை பலப்படுத்தும் விதமாக தனது மகன் விஜய பிரபாகரனை கட்சியின் இளைஞரணி தலைவராக நியமிக்க விஜயகாந்த் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த காலங்களில் தேமுதிகவின் நம்பிக்கையாக கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் இருந்தார். ஆனால் அவரின் உடல்நிலை பாதித்த பிறகு அவரது குடும்பத்தினர் எடுத்த முடிவுகள் கட்சியை சரிவை நோக்கி கொண்டு சென்றது. அவரின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மைத்துனர் சுதீஷ் அவர்கள் கட்சியை நிர்வகித்து வந்தாலும் அவர்களின் அரசியல் ரீதியிலான தவறான முடிவுகள், அதனால் ஏற்பட்ட தொடர் தோல்விகள், விஜயகாந்தின் உடல்நிலை பாதிப்பு போன்ற காரணங்களால் தேமுதிக தொடர்ந்து சரிவை சந்தித்துவருகிறது. அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற அளவிற்கு உயர்ந்த தேமுதிக, அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 4 சீட்டுகளைப் பெறுவதே அக்கட்சிக்கு பெரும் சோதனையாக அமைந்து விட்டது.

Vijayakanth
Vijayakanth

மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்ட விஜயகாந்த் எப்படியாவது மீண்டு புத்துணர்ச்சியுடன் வருவார் என கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரால் தொடர் உடல்நலக் குறைவு காரணமாக முன்பு போல கட்சி பணிகளில் சிறப்பாக ஈடுபட முடியவில்லை. அவரின் சார்பாக அவ்வப்போது அறிக்கைகள் வெளியிட்டு வந்தாலும், கட்சி நிர்வாகிகள், பொதுமக்களையும் தொடர்ச்சியாக சந்திக்க முடியாத நிலையிலேயே விஜயகாந்த் உள்ளார். அவருக்கு அடுத்து கட்சியின் முக்கிய நிர்வாக பொறுப்பை பிரேமலதா எடுத்துக் கொண்டிருக்கிறார், என்றாலும் செயல்பாட்டில் முன்பு போல தேமுதிக இல்லை என்ற வாதமும் தொண்டர்களால் வைக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க விஜயகாந்தின் மூத்தமகன் விஜய பிரபாகரனை முழுமையாக அரசியலில் களமிறக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்பிருந்தே விஜய பிரபாகரன் கட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார், அதைத்தொடர்ந்து மக்களவை தேர்தல் பிரசாரங்களிலும் ஈடுபட்டார். விஜயகாந்த் அளவிற்கு அவருக்கு வரவேற்பு இல்லையென்றாலும்,அவரின் பேச்சு ஓரளவிற்கு தொண்டர்களை கவரும் வகையில் உள்ளதாலும், திமுகவில் உதயநிதி ஸ்டாலினை எல்லாம் தொண்டர்கள் ஏற்று கொண்ட போது தன்னுடைய மகனுக்கும் தொண்டர்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருக்கும் என்ற நம்பிக்கையில் விஜயகாந்த் உறுதியாக இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Vijaya Prabakaran News4 Tamil Online Tamil News Channel
Vijaya Prabakaran News4 Tamil Online Tamil News Channel

இதனையடுத்து முதல் கட்டமாக பொது மக்கள் மத்தியிலும் தொண்டர்களிடமும் இவருக்கு அறிமுகமும் நெருக்கமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லும்படி விஜய பிரபாகரனுக்கு விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி முதலில் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து விரைவில் தன் சுற்றுப்பயணத்தை விஜய பிரபாகரன் தொடங்க இருப்பதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கிராமங்கள் தோறும் பயணம் மேற்கொண்டு கட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து விரைவில் அவரை தேமுதிகவின் இளைஞர் அணி தலைவராக நியமிக்கவும் விஜயகாந்த் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆகஸ்ட் 25 அன்று விஜயகாந்தின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. அதனையொட்டி விஜய பிரபாகரனை இளைஞர் அணி தலைவராக நியமிக்க விஜயகாந்த் அறிவிப்பு வெளியிடலாம் என்றும் தேமுதிக வட்டாரங்கள் கூறுகிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

author avatar
Parthipan K