Vijayakant Started His Journey To America For His Medical Treatment-News4 Tamil Online Tamil News Website
Vijayakant Started His Journey To America For His Medical Treatment-News4 Tamil Online Tamil News Website

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு என்ன நடந்தது? அவர் மீண்டும் அமெரிக்கா பயணம்

தமிழக அரசியலில் திரைத்துறையினருக்கு என்றே தனிமுக்கியத்துவம் கொடுத்து வந்த சூழ்நிலையில் தமிழ் திரைப்பட துறையில் நன்றாக பெயர்பெற்றிருந்த விஜயகாந்த் தனது ரசிகர் மன்றத்தின் மூலமாக மக்கள் நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வந்தார். இதனால் தனக்கு மக்களிடம் உண்டான செல்வாக்கை பயன்படுத்திகொண்டு 2005 ஆம் ஆண்டு தேமுதிக என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.

நடிகர்  விஜயகாந்த்  அவர்களால் தொடங்கப்பட்ட தேமுதிக 2006, 2011 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தல்கள் மூலம் குறிப்பிடத்தக்க  வெற்றியை பெற்றார். ஆனால் அடுத்து நடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற  தேர்தலில் கூட்டணிக்காக திமுக மற்றும் பாஜக எனமாறி மாறி பேச்சுவார்த்தை நடத்திவிட்டு முடிவாக மதிமுக தலைவர் வைகோ மற்றும் விசிகவின் திருமாவளன்  அவர்களால் உருவாக்கப்பட்ட மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து படுதோல்வியை தழுவியது.

கூட்டணியே வேண்டாம் என்று தனித்து நின்று அரசியலை தொடங்கிய விஜயகாந்த் முதலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சி தலைவர் அளவிற்கு உயர்ந்தார். ஆனால் அதையும் சரியாக  பயன்படுத்தி கொள்ளாமல் கூட்டணியிலிருந்து விலகி அடுத்து வந்த நாடளமன்ற தேர்தலில் திமுக மற்றும் பிஜேபியுடன் மாறி மாறி கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி மக்கள் மத்தியில் தனக்கிருந்த செல்வாக்கை குறைத்து கொண்டார். இதனையடுத்து தமிழகஅரசியலில் விஜயகாந்திற்கு இறங்கு முகமாகவே இருந்து வருகிறது. இதற்கிடையில் அவ்வப்போது உடல்நலப் பிரச்சனையிலும் பாதிக்கப்பட்டு வருகிறார். தொடர்ந்து மேடைகளில் பேசமுடியாமல் திணறிய  அவர் முடிவில் மேடை பேச்சுக்களை தவிர்த்து வந்தார்

இந்நிலையில் சமீபத்தில் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். பலநாட்களாக அங்கு தங்கியிருந்த விஜயகாந்த் பற்றி எந்த தகவலும் வெளிவரவில்லை. அப்போதுஅமெரிக்காவில் இருந்த மாதிரி புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு, தனது ரசிகர்களையும், தொண்டர்களையும் நிம்மதி அடையச்செய்தனர் அவர் குடும்பத்தினர். 

சிறுநீரகம், குரல்வளை ஆகியவற்றில் உள்ள பிரச்சனைக்காக தொடர் சிகிச்சைகளை விஜயகாந்த் எடுத்து வருகிறார். இதனால் தேமுதிக கட்சிப் பணிகளை பொருளாளர் பிரேமலதா கவனித்து வருகிறார். அதே நேரத்தில் தனது மகனையும் அரசியலில் ஈடுபட அனுமதித்துள்ளார்.சில நாட்களுக்கு முன்பு தேமுதிக கட்சிக்கென தனி இணையதளத்தை விஜயகாந்த் தொடங்கி வைத்தார்.இதன் பிறகு தமிழக அரசியலில் மறுபடியும் விஜயகாந்த் செயல்படுவார் என்று அவரது தொண்டர்கள் எதிர்பார்த்திருந்த சூழ்நிலையில் மறுபடியும் அவர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

இது பற்றி விஜயகாந்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் தமிழக அரசியலில் மீண்டும் சிறப்பாக செயல்படுவர் என்று எதிர்பார்த்திருந்த அவரது கட்சியினர் மற்றும் தொண்டர்கள் இடையே மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டது. 

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் செய்வதற்காக உடற்பரிசோதனை செய்துகொள்ள அமெரிக்கா சென்றுள்ளதாகவும் வரும் தேர்தலில் விஜயகாந்த் புத்துணர்ச்சியுடன் பிரச்சாரம் செய்வார் என்றும் அவரது கட்சியினர் கூறியுள்ளனர்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள்,தேசிய செய்திகள்,உலக செய்திகள்,விளையாட்டுசெய்திகள்,வர்த்தக செய்திகள்,தொழில்நுட்பசெய்திகள் மற்றும் சினிமா செய்திகளை அறிய News4 Tamil செய்திஇணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

Vijayakant Started His Journey  To America For His Medical Treatment