முன்னாள் அமைச்சருக்கு அனுப்பப்பட்ட சம்மன்! அதிர்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி!

0
75

சென்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம் ஆர் விஜயபாஸ்கர் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனை அப்போது பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை அப்போதைய அதிமுக அரசு.

இதனையடுத்து அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் தொடர்பான தொண்ணூத்தி ஏழு பக்கங்களைக் கொண்ட ஒரு புகாரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களிடம் வழங்கினார். ஆனால் இதுதொடர்பாக ஆளுநரும் கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில், தற்போது திமுக ஆட்சிக்கு வந்து இருக்கின்ற சூழ்நிலையில், முதல் வேலையாக முன்னாள் அமைச்சர்கள் மீதான நடவடிக்கையை முன்னெடுக்க தொடங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அதாவது முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை செய்வதற்காக புறப்பட்டது. இதில் பல ஆவணங்கள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்பு துறை சார்பாகவும், திமுக சார்பாக சொல்லப்பட்டாலும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பில் என்னுடைய தரப்பிலிருந்து எந்தவிதமான ஆதாரமும் கிடைக்கவில்லை என்று பதிலடி கொடுத்தார்.

இந்த நிலையில், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை சார்பாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் எந்த ஒரு ஆவணமும் கிடைக்கவில்லை என் முன்னால் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தாலும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பாக அது தொடர்பான ஆவணங்களை தேடி கண்டுபிடித்து இருக்கிறார்கள். அந்த ஆவணங்கள் தொடர்பாக எதிர்வரும் 30ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பி உள்ளார்கள்.

மேலும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்திருக்கின்ற நிலையில், கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் அல்லது சென்னையில் இருக்கின்ற லஞ்ச ஒழிப்புத் துறையின் தலைமை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

இதனை அடிப்படையாகக் கொண்டு வரும் 30ஆம் தேதி சென்னை ஆலந்தூரில் இருக்கக்கூடிய லஞ்ச ஒழிப்புத் துறை தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. விஜயபாஸ்கர் அவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது அதிமுக தலைமை மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.