வாரிசு படத்தின் இசை வெளியீடு எங்கே? எப்போது?… வெளியான தகவல்!

0
82

வாரிசு படத்தின் இசை வெளியீடு எங்கே? எப்போது?… வெளியான தகவல்!

விஜய், தற்போது நடித்து வரும் அவரின் 66 ஆவது படமான ‘வாரிசு’ படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். தமிழில் வாரிசு எனவும் தெலுங்கில் வாராசடு என்ற பெயரிலும் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார்.

படத்தின் ஷூட்டிங் மொத்தமாக முடிந்து தற்போது டப்பிங் பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் மற்ற கதாபாத்திரங்கள் அனைவரையும் பேசவைத்து  அதன் பின்னர் விஜய் காட்சிகளுக்காக டப்பிங் பேசப்படும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் ஒட்டுமொத்த இசை வெளியீடும், வரும் டிசம்பர் 24 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது சம்மந்தமான பணிகள் தற்போது தொடங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடலான ரஞ்சிதமே என்ற பாடல் வெளியானது. விஜய்யோடு பாடகி மானசி இணைந்து பாடியுள்ள இந்த பாடல் நாட்டுப்புற துள்ளலிசை பாடலாக அமைந்து ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளது. இந்த பாடலை பிரபல பாடல் ஆசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

வாரிசு திரைப்படம் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக உள்ளது. அதே நாளில் அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியாகும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.