Breaking News
விஜய் சேதுபதியின் அடுத்த படம்!! மலேசியாவில் கோலாகலமாக நடந்த பூஜை!!

விஜய் சேதுபதியின் அடுத்த படம்!! மலேசியாவில் கோலாகலமாக நடந்த பூஜை!!
நடிகர் விஜய் சேதுபதி இவர் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சிறப்பாக நடிக்கக் கூடியவர். இவர் தற்போது புதிய இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகந்த் இயக்கத்தில் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தில் மோகன் ராஜா, மகிழ் திருமேனி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தற்போது திரையரங்கில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. தற்போது விஜய் சேதுபதியின் அடுத்த படம் பற்றி தெரிய வந்துள்ளது. அதாவது, விஜய் சேதுபதியின் புதிய படத்திற்கான பூஜை இன்று காலை மலேசியாவில் உள்ள கோவிலில் நடைப்பெற்றுள்ளது.
இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மணி நடிக்கிறார். மற்றும் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஆறுமுக குமார் இயக்குகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ஆறுமுக குமார் ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தை தயாரித்து, இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் திரைப்படம் சரியாக போகாத நிலையில் மீண்டும் அந்த இயக்குனருடன் கூட்டணி சேர்ந்துள்ளார் விஜய் சேதுபதி. மீண்டும் சேர்ந்துள்ள இந்த கூட்டணி இந்த படத்தில் வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.