மருத்துவர் ராமதாசின் கோரிக்கையை ஏற்ற விஜய் சேதுபதி! சர்ச்சைக்குரிய படத்திலிருந்து விலக அறிவிப்பு! தமிழ் ஆர்வலர்கள் பாராட்டு

0
62
Vijay Sethupathi with Ramadoss-News4 Tamil Online Tamil News
Vijay Sethupathi with Ramadoss-News4 Tamil Online Tamil News

மருத்துவர் ராமதாசின் கோரிக்கையை ஏற்ற விஜய் சேதுபதி! சர்ச்சைக்குரிய படத்திலிருந்து விலக அறிவிப்பு! தமிழ் ஆர்வலர்கள் பாராட்டு

 

இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் 800 என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க பலத்த எதிர்ப்புகள் கிளம்பியது. இது குறித்து எதிர்ப்புகளை சமூக ஆர்வலர்கள் பதிவிட்டதால் சமூக வலைத்தளமான ட்விட்டரில் ‘ஷேம் ஆன் விஜய் சேதுபதி’ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது.

 

மேலும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் துரோகத்திற்கு துணை போவதா? படத்தில் நடிப்பது ஒரு கலைஞனாக விஜய் சேதுபதியின் விருப்பமாக இருந்தாலும் ஒரு துரோக வரலாற்றில் இடம் பெற வேண்டுமா என்பது குறித்து அவர் சிந்திக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

 

மேலும் மதிமுக சார்பில் வைகோ, நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீமான், இயக்குனர் பாரதிராஜா, சீனுராமசாமி, சேரன், தாமரை உள்ளிட்ட பலர் 800 திரைப்படத்திலிருந்து விஜய்சேதுபதியை விலகும்படி வற்புறுத்தியிருந்தனர். ஆனால் வழக்கம் போல தேசிய கட்சியான பாஜக இந்த விவகாரத்தில் தமிழர்களுக்கு எதிரான நிலைபாட்டையே எடுத்தது.அக்கட்சியை சேர்ந்த அண்ணாமலை மற்றும் குஷ்பு உள்ளிட்டோர் விஜய் சேதுபதி அந்த படத்தில் நடிக்க ஆதரவு தெரிவித்திருந்தனர்.

Vijay Sethupathi with Ramadoss News4 Tamil Online Tamil News
Vijay Sethupathi with Ramadoss-News4 Tamil Online Tamil News

கவிஞர் வைரமுத்து சமூக வலைத்தளமான ட்விட்டரில், “கலையாளர் விஜய் சேதுபதிக்கு, சில நேரங்களில் செய்து எய்தும் புகழைவிட செய்யாமல் எய்தும் புகழே பெரிதினும் பெரிது செய்யும். நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள். வளர்பிறையில் கறை எதற்கு? இன உரிமைக்காக கலை உரிமையை விட்டு கொடுப்பதே விவேகம். நீங்கள் விவேகி” என்று இந்த திரைப்படத்தில் அவர் நடிப்பது குறித்து பதிவிட்டிருந்தார்.

 

இந்நிலையில் இந்த படத்தில், இளம் வயது முரளிதரனாக நடிக்க டி.ஜே அருணாச்சலம் மறுத்துள்ளார். இவர் அசுரன் படத்தில் தனுஷ் மகனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து நடிகர் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை செய்வதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

 

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தமிழர்களின் உணர்வுகளை மதித்து ஈழத் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்ட முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இந்நிலையில், ’’நடிகர் விஜய் சேதுபதி மீது அன்பும் கூடுகிறது. தமிழர்களின் மன உணர்வை மதித்தமைக்கு நன்றி’’ என்று இயக்குநர் கீரா தெரிவித்திருப்பதால், 800 படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகுவதாக முடிவெடுத்துவிட்டார் என்பது உறுதியாகிறது.

author avatar
Ammasi Manickam