லியோ படத்தில் விஜய் சேதுபதி? திரைக்கதை ஆசிரியரின் ஹின்ட்!!

0
108
Vijay Sethupathi in Leo? Screenwriter's Hint!!
Vijay Sethupathi in Leo? Screenwriter's Hint!!

லியோ படத்தில் விஜய் சேதுபதி? திரைக்கதை ஆசிரியரின் ஹின்ட்!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி என இருவரையும் இணைத்து மாஸ்டர் படத்தை கொடுத்தார். இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. பிறகு கமலுடன் இணைந்து விக்ரம் படத்தை இயக்கினார்.

இந்த படத்திலும் நடிகர் விஜய் சேதுபதி “சந்தனம்” எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மீண்டும் விஜயுடன் இணைந்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் லியோ படத்தின் திரைக்கதை ஆசியர்களில் ஒருவரான ரத்னகுமார், விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி அணிந்த கண்ணாடியை புகைப்படம் எடுத்து, அதை வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் லியோ படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக உற்சாகம் அடைந்தனர். ஆனால் இது குறித்து பேசிய நடிகர் விஜய் சேதுபதி, தான் விஜயின் லியோ படத்தில் நடிக்கவில்லை என்றும், ரத்னகுமார் எதற்கு இது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் என தெரியவில்லை என கூறியுள்ளார்.

author avatar
CineDesk