விஜய் அரசியலுக்கு வருகிறாரா? அல்லது அரசியல்வாதிகளை மிரட்டி பார்க்கிறாரா? பகீர் கிளப்பும் சவுக்கு சங்கர்!

0
57

தமிழகத்தைப் பொருத்தவரையில் அரசியலும் திரைத்துறையின் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து தான் இருக்கிறது என்றால் அது மிகையாகாது.இதற்கு ஒரு சிறந்த உதாரணம் என்றால் அது தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தான்.

அவர் திரைத்துறையில் சாதாரணமான ஒரு நடிகராக நுழைந்து அதன்பிறகு திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக உயர்ந்து அதன்பின்னர் அரசியலுக்கு வந்தார்.

அதிமுக என்ற கட்சியைத் தொடங்கி அவர் கடந்த 1977ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்ததிலிருந்து 1987ம் ஆண்டு அவர் மறையும் வரை தமிழக அரசியலில் அவரை யாராலும் அசைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒரு மாபெரும் சக்தியாக திகழ்ந்தவர் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்.

அவர் அளித்த ஊக்கத்தின் காரணமாகவே, அவர் மறைவிற்குப் பிறகு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அதிமுகவை வழிநடத்தினார். அவருக்கு தனிப்பட்ட முறையில் பல சோதனைகள் வந்ததெல்லாம் தனிக்கதை.

அவருக்குப் பிறகு அரசியலில் திரைத்துறையிலிருந்து யார் நுழைந்தாலும் இன்றளவும் யாராலும் எம்ஜிஆர் இடத்தை நிரப்பவே முடியாது என்ற ஒரு நிலையை பெற்றிருக்கிறார் எம்ஜிஆர்.

ஜெயலலிதா அரசியலில் தனி முத்திரை பதித்திருந்தாலும் கூட அவராலும் எம்ஜிஆரின் இடத்தை தொட்டுக் கூட பார்க்க முடியவில்லை என்றால் அதுதான் எம்ஜிஆரின் பலம்.

ஆனால் சமீப காலமாக திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் விஜய் அரசியலில் பட்டும் படாமல் நுழைந்து வருகிறார். அவருடைய திரைப்படங்களில் கூட அரசியல்வாதிகளை சீண்டிப் பார்க்கும் ஒரு சில கருத்துக்கள் இடம்பெறத்தொடங்கின.

அதோடு சென்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு சில இடங்களில் வெற்றி பெற்றார்கள்.இது அவருடைய அரசியல் முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.சமீபத்தில் புதுச்சேரியின் முதலமைச்சர் என் ரங்கசாமி அவர்களை சந்தித்து சுமார் 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் நடிகர் விஜய்.

இது தொடர்பாக சவுக்கு சங்கர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, பல தமிழ் கதாநாயகர்கள் எம்ஜிஆரை போல தமிழகத்தை ஆள வேண்டும். என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் எம்ஜிஆர் என்பவர் தனித்துவமானவர் யாரிடமும் அவரை ஒப்பிட்டுப் பேச முடியாது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார் என்று பேச்சுகள் இருந்தபோது ஊடகங்கள் அது தொடர்பாக பல விதமான பல செய்திகளை வெளியிட்டார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும் தற்சமயம் அது அனைத்தும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது தற்சமயம் ஊடகங்கள் கையில் எடுத்திருக்கிற கதாநாயகர் தான் தற்போது நடிகர் விஜயின் அரசியல் பேசுபொருளாக மாறியிருக்கிறது. காரணம் ஊடகங்கள் முக்கியத்துவம் தான் நடிகர் விஜயின் தற்போதைய சூழ்நிலையை வைத்து அவர் அரசியலுக்கு வந்துவிட்டார், வரப்போகிறார், என்பது போல நாம் சொல்லிவிட இயலாது.

அவர் வெளிப்படையாக கட்சியின் பெயரை பதிவு செய்து என்னுடைய ரசிகர்களான விஜய் மக்கள் இயக்கத்திற்கு ஆதரவு கொடுங்கள் என்று வெளிப்படையாக அறிக்கை வெளியிடும் பட்சத்தில் அதை நாம் அனைவரும் நம்பலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

அதுவரையில் இது ஒரு நிழல் இதமாகவே இருக்கும் ரஜினி எப்படி போர் வரப்போகிறது போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என சொன்னாரோ அதேபோல தற்சமயம் விஜய் செய்யத் தொடங்கியிருக்கிறார். ஆனந்த் சொல்வதையெல்லாம் விஜயின் வார்த்தையாக எடுத்துக்கொள்ள இயலாது.

பெற்ற தாய், தந்தையரே, தன்னுடைய பெயரை பயன்படுத்தக் கூடாது என்று விஜய் வழக்குப் போட்டிருக்கும் பட்சத்தில் யாரோ ஒருவர் சொல்வது தான் விஜய்யின் மனசாட்சி என்று எப்படி நம்ப முடியும்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ஆனால் இதைப் பற்றி தனியாக சிந்தித்துப் பார்த்தால் எந்த ஒரு நடிகரும் அரசியல் என்ற வட்டத்திற்குள் நுழைய வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் கூட திரைத்துறையில் அவர்களுக்கு அதிக மார்க்கெட் இருக்கும் வரையில் அரசியலுக்கு யாரும் வர ஆர்வம் காட்டுவதில்லை.

அதையேதான் முன்னொரு காலத்தில் ரஜினிகாந்தும் செய்தார், எம்ஜிஆரும் செய்தார், தற்சமயம் அதனைத் தொடர்ந்து விஜயம் செய்து வருகிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

எம்ஜிஆர் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்து ஒரு மாபெரும் சகாப்தமாக வாழ்ந்து மறைந்துவிட்டார். அவருடைய புகழ் இன்றும் மங்காமல் இருந்துவருகிறது. அவரைப் போன்று அரசியலில் மங்காப் புகழ் பெற வேண்டும் என்பதுதான் அனைவருடைய ஆசையாக இருக்கும். ஆனால் அவருடைய புகழை எல்லோராலும் எட்டிவிட முடியாது என்பதே அரசியல் ஆர்வலர்களின் கருத்தாக இருந்து வருகிறது.