ஜப்பானில் வெளியாகும் விஜய்யின் சூப்பர் ஹிட் படம்… வெளியான தகவல்!

0
113

ஜப்பானில் வெளியாகும் விஜய்யின் சூப்பர் ஹிட் படம்… வெளியான தகவல்!

நடிகர் விஜய் நடித்து 2021 ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் ஜப்பானில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் கொரோனா லாக்டவுனுக்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு புத்துணர்ச்சி கொடுத்த படமாக அமைந்தது. அந்த படத்துக்குதான் திரையரங்குகளுக்கு ரசிகர்கள் பெரியளவில் வந்து ஆதரவை அளித்தனர்.

விஜய்யுடன் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். அவரின் கதாபாத்திரமும் அனிருத்தின் இசையும் படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தன. படத்தின் பாடல்கள் உலகம் முழுவதும் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றுத் தந்தன.

இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றாலும், நீண்டகாலமாக ரிலீஸ் ஆகாமல் இருந்ததால் அந்த படத் தயாரிப்பாளரான லலித்துக்கு லாபம் இல்லை என்றே சொல்லப்பட்டது. அதனால் இப்போது விஜய்யும் லோகேஷும் மீண்டும் இணையும் படத்தை லலித்தே மீண்டும் தயாரிக்கிறார். இந்த படம் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது.

இந்நிலையில் இப்போது மாஸ்டர் படம் ஜப்பானில் அடுத்த மாதம் மொழிமாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பானைப் பொறுத்தவரை அங்கு ரஜினி படங்கள் நல்ல வரவேற்பைப் பெறும். சமீபத்தில் ஆர் ஆர் ஆர் படம் அங்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டன. இதையடுத்து விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.