பேனர் வைக்கும் செலவில் தளபதி ரசிகர்கள் செய்த உருப்படியான விஷயம்!

0
76

பேனர் கலாச்சாரத்தால் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம் பெண் பலியான நிலையில் இனிமேல் பேனர் வைக்க வேண்டாம் என மாஸ் நடிகர்கள் தங்களுடைய ரசிகர்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய தொண்டர்களுக்கும் அறிவுறுத்தினர்

சுபஸ்ரீ சம்பவத்தை அடுத்து வெளிவந்த சூர்யாவின் காப்பான் மற்றும் தனுஷின் அசுரன் ஆகிய திரைப்படங்கள் ரிலீசின் போது சூர்யா மற்றும் தனுஷ் ரசிகர்கள் பேனர் வைக்கும் செலவுக்கு பதிலாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மத்தியிலும் நல்ல பெயர் கிடைத்தது

இந்த நிலையில் சமீபத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்திற்கும் பெரும்பாலான விஜய் ரசிகர்கள் பேனர் வைப்பதற்கு பதிலாக நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்

அந்த வகையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு பள்ளி அடிப்படை வசதி இல்லாததை அறிந்து பிகில் படத்தை முன்னிட்டு தளபதி விஜய்ரசிகர்கள் நலத்திட்ட உதவிகளை செய்துள்ளனர். இந்த பள்ளிக்கு தேவையான அடிப்படை அம்சங்களான குடிநீர் டேங்க், கழிப்பறைகள், கழிவுநீர் சேமிப்பு ஆகிய வசதிகளை செய்து தந்துள்ளனர்

விஜய் ரசிகர்களின் இந்த பணியை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். இதேபோல் அனைத்து தரப்பு ரசிகர்களும் இவ்வாறு சமூகப் பணிகளை செய்து அவரவர்களின் நடிகர்களுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்கவேண்டும் என்று குறி வருகின்றனர்

பேனர் கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிப்போம் என்று உறுதி கூறிய அரசியல்வாதிகள் தங்கள் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு மீண்டும் பேனர் கலாச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில் மாஸ் நடிகர்களின் ரசிகர்கள் தொடர்ந்து தாங்கள் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி வருவது சிறப்பு கூறியதாக கருதப்படுகிறது

author avatar
CineDesk