முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ!! கெஞ்சும் முதல்வர்!! மக்களின் அலட்சியம்!!

0
60
Video of Chief Minister Stalin !! Begging Chief !! People's indifference !!
Video of Chief Minister Stalin !! Begging Chief !! People's indifference !!

முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ!! கெஞ்சும் முதல்வர்!! மக்களின் அலட்சியம்!!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 ஆம் அலை நாளுக்கு நாள் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே  உள்ளன. எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த  தமிழகத்தில் இன்று  முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்த ஒரு வாரம் காய்கறி, மளிகைக் கடைகள், பழக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டும். மருந்து பொருட்கள், பால் மட்டுமே கிடைக்கும். இந்நிலையில் முழு ஊரடங்கு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் தமிழகத்தில் தளர்வுகளுடன் போடப்பட்ட ஊரடங்கில்  கொரோனா தொற்று  கட்டுக்குள் வரவில்லை.  இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நாம் அனைவரும் கண்டிப்பான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். எங்களின் புதிய அரசு அமைந்த 2 வாரத்தில் நிறைய நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000, அரசு பேருந்துகளில்  பெண்களுக்கு கட்டணமில்லா பயணம்,  தூத்துக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பணி, ஆவின் பால்  விலை குறைப்பு, கொரோனா நோயாளிகளுக்கு முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை, கொரோனா தடுப்பு பணிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான 17 ஆயிரம் புதிய படுக்கைகள்  உருவாக்கப்பட்டுள்ளன.

ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்துள்ளோம்.  புதிய செவிலியர்கள் மற்றும் புதிய டாக்டர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். தளர்வுகளுடன் ஊரடங்கு போட்ட போது நிறைய மக்கள் வெளியில் சுற்றி வந்தனர். யாரும் ஊரடங்கை  மதிக்காத காரணத்தினால் தளர்வுகள் இல்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டியுள்ளது. தொற்று பாதிப்பு நாள் ஒன்றுக்கு  35 ஆயிரத்திற்கு மேல் எட்டியுள்ளது. இதற்கு மக்களின் அலட்சியமே  காரணம். கொரோனாவைக் கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லா ஊரடங்கே ஒரே வழி. ஊரடங்கு நம் அனைவரின்  நலனுக்கு தான்  என உணர்ந்து அனைவரும் வீட்டிலேயே இருங்கள்.

இது கசப்பு மருந்து தான். ஆனாலும் அருந்தியே ஆக வேண்டும். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதால் நிவாரண நிதி வழங்குகிறோம். இந்த ஊரடங்கை மக்கள் அரசு உத்தரவுக்கு கட்டுப்பட்டு மக்கள் வீட்டுக்குள்ளேயே இருங்கள் என கெஞ்சி கேட்கிறேன் என்றார். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள். கொரோனாவை தடுக்க தடுப்பூசியே சிறந்த ஆயுதம். ஆகையால் அனைவரும் கொரோனா தடுப்பூசியை போடுங்கள். ஊரடங்கை மக்கள் அனைவரும் முழுமையாக பின்பற்ற வேண்டும். மாஸ்க் தவறாமல் அணிய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

author avatar
CineDesk