தமிழில் அர்ச்சனை செய்ய தடை! உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

0
64

திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் பல மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து அதிரடி காட்டி வருகின்றது. தமிழக அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பையும், ஆதரவையும், பெற்றிருக்கிறது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் அடிப்படையில் அதற்காக உரிய பயிற்சி பெற்று காத்திருப்பவர்கள் உள்ளிட்டவர்களை ஓதுவார்கள் ஆகவும், அர்ச்சகர்களாக நியமனம் செய்து தமிழக அரசு நியமனங்களை வழங்கி வருகின்றது.

இருந்தாலும் இதற்கு தமிழ்நாட்டில் பல இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்து அறநிலையத் துறை சார்பாக செய்யப்பட்ட வரும் அர்ச்சகர் பணி நியமனத்தை எதிர்த்து திருச்சி ஸ்ரீரங்கத்தில் சார்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது ஆகம விதிகளுக்கு எதிராக இருக்கிறது. கோவில்களில் எந்த மொழியில் மந்திரம் சொல்ல வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் அரசுக்கோ, இந்து அறநிலைத்துறைக்கோ இல்லை என தெரிவித்ததோடு, அர்ச்சகர்கள் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த சூழ்நிலையில், அந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த சமயத்தில் மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் 1998ஆம் வருடம் உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின் சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆண்டாண்டு காலமாக கோவில்களில் பின்பற்றப்படும் ஆகம விதிகளை மாற்ற இயலாது. மத விவகாரங்களில் அரசு தலையிட இயலாது என வாதிட்டு இருக்கிறார். அதோடு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி இருக்கிறார். இருந்தாலும் அவருடைய வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டார்கள்.

கடந்த 2008ஆம் வருடம் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது அவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது எனவும், தமிழில் அர்ச்சனை செய்ய எந்தவிதமான தடையும் கிடையாது எனவும், தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு ஒரு குறிப்பிட்ட மொழியில் தான் அர்ச்சனை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் எந்த விதத்திலும் வற்புறுத்த இயலாது என்றும் தெரிவித்ததோடு, ரங்கராஜன் நரசிம்மன் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதோடு ஏற்கனவே உயர்நீதிமன்றம் பரிசீலித்து அளித்த தீர்ப்பிற்கு முரணான முடிவு எடுக்க இயலாது என்றும், முன்னரே எடுக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்ய தேவையில்லை எனவும் அப்படி செய்ய இந்த வழக்கிற்கு எந்தவிதமான தகுதியும் கிடையாது என்றும் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்கள் நீதிபதிகள்.