அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு உறுதியான நோய்த்தொற்று பரவல்! வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்!

0
64

உலகம் முழுவதும் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. இதன் காரணமாக, உலக நாடுகள் அனைத்தும் பலவிதமான சிக்கல்களை சந்தித்து வருகின்றன.

அதோடு மிகப்பெரிய பொருளாதார வல்லரசு நாடுகளும் இந்த நோய்த்தொற்று பரவலால் பெரும் பாதிப்பை சந்தித்திருக்கின்றன. அதில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பு அதிகம் அதிலும் அமெரிக்கா இந்த நோய் தொற்றால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவின் துணை அதிபராக இருந்து வரும் கமலா ஹாரிஸுக்கு நோய்த்தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அவருக்கு எந்த அறிகுறிகளுமில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அதிபர் ஜோ பைடனுடன் நெருங்கிய தொடர்பில்லை என்று வெள்ளை மாளிகை அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

நோய்த் தொற்று பாதிப்பு கமலா ஹாரிஸுக்கு எந்தவித அறிகுறிகளையும் வெளிப்படுத்தவில்லை. அவர் தனிமைப்படுத்தப்பட்டு துணை அதிபர் இல்லத்திலிருந்து தொடர்ந்து பணியாற்றுகிறார்.

நோய் தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ள அவர், தற்போது நலமுடனிருக்கிறார். நோய்த்தொற்று வழிகாட்டுதல்கள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடந்துகொள்ளும் அவர், உறுதியான பரிசோதனைக்கு பிறகு வெள்ளை மாளிகை திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.