வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியவை

0
113
Selvam peruka seiya vendiyavai
Selvam peruka seiya vendiyavai

வீட்டிலுள்ள செல்வம் பெருகவும் தொடர்ந்து நிலைத்திருக்கவும் நாம் சில ஆன்மீக வழக்கங்களை நாம் பின்பற்ற வேண்டும் என்று இந்து ஆன்மிகம் கூறுகிறது.

ஒருவருவரும் அவரது வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு அருந்த தண்ணீர் தர வேண்டும். அதன் பின்னர் மஞ்சள் மற்றும் குங்குமம் தர வேண்டும். இப்படி செய்வதால் அவர்களுக்குண்டான ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து தொடர்ந்து பண வரவு ஏற்பட்டு செல்வம் பெருகும்.

ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் யாரும் அவர்களது வீட்டு வாசலில் கோலம் இடக்கூடாது. மேலும் தலைக்கு எண்ணெய் தடவக் கூடாது. காலைப் பொழுதில் பூஜை எதுவும் செய்யக் கூடாது. இதனையடுத்து பிதுர்களை மட்டும் வழிபட்டுவர பணம் வரவு ஏற்பட்டு வீட்டில் செல்வம் பெருகும்.

ருத்திராட்சம்,ஸ்படிகம் மற்றும் துளசி மணி உள்ளிட்ட மாலைகளை ஜபம் மற்றும் ஹோமம் செய்யும் காலங்களைத் தவிர மற்ற நாட்களில் அணியக் கூடாது. மேலும் வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயிர், குடிநீர், உப்பு, ஊசி மற்றும் நூல் உள்ளிட்டவைகளை வீட்டை விட்டு வெளியே கொடுக்கக் கூடாது. இப்படி செய்தால் வீட்டில் உள்ள செல்வம் மற்றும் பணமும் உங்களை விட்டு சென்று விடும்.

கோயிலுக்குச் செல்லும் நேரத்திலும்,பூஜை செய்யும் காலங்களிலும் பெண்கள் அவர்களது தலை முடியை அப்படியே தொங்கவிட்டு செல்லாமல் நுனியில் முடிச்சுப் போடவேண்டும். இவ்வாறு செய்வதால் வீட்டில் பண வரவும் செல்வமும் தொடர்ந்து நிலைத்திருக்கும்.

பூஜை செய்யும் நேரத்தில் பூத்தட்டை பெண்கள் மடியில் வைத்து பூவெடுத்து பூஜை செய்யக் கூடாது. மேலும் வெறுங்கையில் பூவை பறித்து வந்து அதை இறைவனுக்கு படைத்து பூஜை செய்யக் கூடாது.

ஒவ்வொருவரும் நீங்கள் அணியும் ஒற்றை ருத்திராட்சத்தைக் கழுத்துக் குழிக்கு மேல் தான் கட்ட வேண்டும். அது அந்த இடத்திற்கு கீழே இறங்கக் கூடாது. மேலும் அது எப்பொழுதும் கழுத்தில் இருக்கலாம். துளசி மற்றும் வில்வம் உள்ளிட்டவற்றை செவ்வாய், வெள்ளி, அமாவாசை பெளர்ணமி, துவாதசி சாயங்காலம் மற்றும் இரவு நேரங்களில் பறிக்கக் கூடாது.

வீட்டில் சாமியிடம் ஏற்றிய பிறகு அந்த தீபத்தை வாயினால் ஊதி அணைக்கக் கூடாது. மேலும் விரலால் பால் தொட்டு வைத்தோ, குங்குமம் வைத்தோ, பூவாலோ அந்த தீபத்தை அணைக்கலாம். இதையெல்லாம் கடைபிடித்தால் வீட்டில் எப்பொழுதும் செல்வமும்,பணவரவும் நிலைத்திருக்கும் என்று இந்து ஆன்மிகம் தெரிவிக்கிறது.