நினைவில்லம் திறப்பதற்கு தடை கேட்ட வழக்கு! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0
71

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த போயஸ் தோட்ட வீட்டை இன்றைய தினம் பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைப்பதில் எந்த ஒரு தடையும் கிடையாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து அவர் வாழ்ந்து கொண்டிருந்த சென்னை போயஸ் தோட்டத்தில் இருக்கின்ற வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றபடுவதற்கான உத்தரவை 2017 ஆம் வருடம் தமிழக அரசு அறிவித்தது.

இதனைத்தொடர்ந்து போயஸ் தோட்ட இல்லத்தை அரசுடைமை ஆக்கியது தமிழக அரசு .அந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு இழப்பீடாக தமிழக அரசு சார்பாக 68 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது .இதனை அடுத்து அந்த வீடு நினைவு இல்லமாக மாற்றுவதற்கான வேலைகள் மிகத்தீவிரமாக நடந்தது. இதற்கென்று சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்து பல ஆய்வுகளை செய்து வந்தது தமிழக அரசு.

இந்த நிலையில், ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லமனது இன்றைய தினம் திறக்கப்படும் எனவும், இதனை தொடர்ந்து மக்கள் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அவரது சகோதரர் தீபக் போன்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள்.

அவர்கள் தொடர்ந்த அந்த வழக்கில், நேற்றைய தினம் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது .அந்த தீர்ப்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நாளைய தினம் திறந்து வைப்பதற்கு எந்த ஒரு தடையும் இல்லை எனவும், ஆனால் பொதுமக்களை நினைவில்லத்திற்குள் செல்வதற்கு அனுமதிக்கக் கூடாது எனவும் ,அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அவருடைய சகோதரர் தீபக் போன்றோர் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.