வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ ரிலீஸ் எப்போது? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

0
83

வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ ரிலீஸ் எப்போது? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் சிந்து இத்னானி நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

மாநாடு படத்தின் வெற்றியால் சிம்புவின் மார்க்கெட் பல மடங்கு அதிகமாகி சிம்புவின் திரை வாழ்வில் இது ஒரு முக்கியமான படமாக அமைந்தது. மாநாடு படத்தை தொடர்ந்து தற்போது சிம்புவின் அடுத்த ரிலீஸாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்க ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சிம்பு, ஏ ஆர் ரஹ்மான் மற்றும் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படம் இதுவாகும்.

வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.செப்டம்பர் 15 ஆம் தேதி படத்தை வெளியிட உள்ளனர். தமிழக திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்னர் சிம்பு நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தையும் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழுவதும் முடிந்துள்ள நிலையில் சமீபத்தில் டப்பிங் பணிகளை முடித்துள்ளார் சிம்பு. அடுத்து படத்தின் ஆடியோ மற்றும் டிரைலருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் அமெரிக்காவில் இருப்பதால் இசை வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.