நீங்கள் இதை செய்தால் நான் உங்களுடனேயே இருப்பேன்! உதயநிதி ஸ்டாலின் வழங்கிய உத்தரவாதம்!

0
65

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருக்கின்ற சூழ்நிலையில், கோயம்புத்தூர் மாவட்ட பொறுப்பாளரான அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் திமுகவின் ஒட்டுமொத்த முகவர்கள் கூட்டம் கொடிசியா அரங்கில் நேற்று நடந்தது. மொத்தமாக 25 ஆயிரம் முகவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் ஒவ்வொருவருக்கும் மினி புக் கொடுத்து தொடங்கி தேர்தல் பணிகள் தொடர்பான பாடம் எடுத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்ற சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டத்தில் மட்டும் நாம் எதிர்பார்த்த வெற்றி பெற இயலவில்லை, கோயமுத்தூர் மாவட்ட மக்கள் காலை வாரி விட்டீர்கள் அதற்கு பல காரணங்கள் உள்ளன எனக் கூறியிருக்கிறார்.

அதில் ஒன்று அப்போது அமைச்சராக இருந்த வேலுமணி ஊழல் செய்து அடித்து வைத்திருந்த பணத்தை பொது மக்களுக்கு வழங்கிய வாக்குகளாக மாற்றிவிட்டார். அந்த சமயத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நம்முடைய தலைவர் அதிமுகவில் ஊழல் செய்த எல்லோரும் சிறைக்கு செல்வது உறுதி என்று தெரிவித்தார், அந்த வேலையும் தற்சமயம் ஆரம்பித்துவிட்டார் மிக விரைவில் வேலுமணி அவர்கள் கைது செய்யப்படுவது உறுதி என்று கூறியிருக்கிறார்.

அதே சமயம் நம்முடைய கட்சியில் இருந்து கொண்டே சரியாகப் பணிபுரியாதவர்கள் மீது தலைவர் மிக விரைவாக நடவடிக்கையை மேற்கொள்வார் என்று உறுதி மொழியை நான் உங்களுக்கு வழங்குகிறேன் என்றும் தெரிவித்தார்.

இந்த கோயம்புத்தூர் மாவட்டத்தை விட்டாலும் நான் கோட்டையை பிடித்து இருக்கின்றோம். ஆனால் வருகின்ற உள்ளாட்சித் தேர்தல், மக்களவைத் தேர்தலில் திமுக 100 சதவீத வெற்றியை பெற்றது என்ற நிலை வரும் வரை நாம் ஓய்ந்து விடக்கூடாது கோயம்புத்தூர் மாவட்டத்தில் நீங்கள் வெற்றி பெற்று கொடுத்தால் மாதம் பத்து நாட்கள் நான் கோவை வந்து உங்களுடனேயே இருப்பேன் என்று உரையாற்றியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

சென்ற சட்டசபை தேர்தலில் திமுகவின் முக்கிய புள்ளிகள் அனைவரும் கோயமுத்தூர் மாவட்டத்தில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு இடத்தில் கூட திமுக வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.