வேலூர் சிறையில் பரபரப்பு?

0
119

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரான முருகன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முருகன்,இவர் அதே சிறையில் உள்ள நளினியின் கணவர் ஆவார்.

இவர்கள் இருவரும் கடந்த 25ஆண்டுக்கும் மேலாக வேலூர் சிறையில் உள்ளனர் அவ்வப்போது இருவரும் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என உண்ண விரதம் இருப்பர் போலீஸார் சமாதானம் செய்து வைப்பர்.

இந்நிலையில்இதன் தொடர்ச்சியாக, கடந்த 21-ந்தேதி முதல் முருகன் மீண்டும் உண்ணாவிரதம் இருந்து வந்தார். தன்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும். உறவினர்கள் கொண்டு வரும் உணவை தர அனுமதிக்க வேண்டும் என கோரி அவர் 9 நாட்களாக ஜெயிலில் உணவை சாப்பிட மறுத்தார். உண்ணாவிரதத்தால் அவரது எடை 64 கிலோவிலிருந்து 42 கிலோவாக குறைந்தது.

அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து நேற்று அவருக்கு 2 பாட்டில் குளுகோஸ் ஏற்றப்பட்டது.

முருகனிடம் நேற்று மாலை ஜெயில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முருகன் ஜெயிலில் உணவு சாப்பிட அனுமதி அளித்தனர்.

மேலும் அவரை பார்க்க வருபவர்கள் கொண்டு வரும் உணவு பொருட்கள் அனுமதிக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து முருகன் போராட்டத்தை கைவிட்டார்.

ஜெயிலில் அவரே சமைத்து சாப்பிட அனுமதி அளித்தனர். இதையடுத்து அவரே சமைத்து சாப்பிட்டார்.முருகனுடன் உண்ண விரதம் மேற்கொண்ட நளினியும் உண்ண விரதத்தை கைவிட்டார்.

author avatar
CineDesk