தேவையின்றி சுற்றி திரிந்த வாகனங்கள்! காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை!

0
71

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் மிகவும் அதிகரித்து வருவதால் தமிழக அரசு முழு ஊரடங்கு உள்ளிட்ட பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதையும் மீறி நோய்த்தொற்று பரவல் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது.

நோய்த்தொற்று பரவல் மிகவும் அதிகமாகி கொண்டு வருவதால் கடந்த 10-ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. அதேபோல ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது இதனைத் தொடர்ந்து தேவையின்றி யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று தமிழக அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது அதோடு மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ பதிவு கட்டாயம் என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால் இபதிவு இல்லாமல் பயணம் செய்வோரின் வாகனங்கள் காவல் துறையின் சார்பாக பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து இருப்பதால் அத்தியாவசிய மற்றும் மளிகை காய்கறி கடைகள் அனைத்தும் காலை 10 மணி வரை மட்டுமே செயல்படுவதற்கு அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், திருச்சி மாநகர எல்லையில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த கார் மற்றும் இரு சக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்டவற்றை இடைமறித்து காவல்துறையினர் இ பதிவு இருக்கிறதா என்று பரிசோதனை செய்து இருக்கிறார்கள். அந்த சமயத்தில் இபதிவு இல்லாமல் அதோடு அத்தியாவசியத் தேவைகள் எதுவும் இல்லாமல் வெளியே சுற்றித் திரிந்தவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து இருக்கிறார்கள்