வீரபாண்டி ராஜாவின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ந்த முதலமைச்சர்! சேலம் விரைந்தார்!

0
65

திமுகவின் முன்னாள் அமைச்சருமான சேலத்து சிங்கம் என்ற அழைக்கப்படக்கூடிய வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும் திமுகவின் தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான வீரபாண்டி ராஜா இன்று தன்னுடைய பிறந்த நாளிலேயே மாரடைப்பு காரணமாக, மரணம் அடைந்தது திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், கிராமசபை கூட்டத்திற்காக மதுரை சென்று இருக்கும் தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் வீரபாண்டி ராஜாவிற்கு இரங்கல் செய்தி வெளியிட்டிருக்கிறார். மிக இளமைக் காலத்தில் செழியனை இழந்தோம் என்று மருத்துவமனை வாசலில் தலைவர் கலைஞர் அவர்களே வாய்விட்டு கதறும் அளவிற்கு சொல்ல முடியாத துயரத்தில் நம்மை ஆழ்த்தி விட்டு பிரிந்து சென்றவர் அண்ணன் வீரபாண்டியார், இதோ இப்போது இன்னொரு இழப்பு வீரபாண்டி ராஜா வீரபாண்டியார் குடும்பத்திற்கு என்ன ஆறுதல் சொல்வது? என்னை நானே எப்படி தேற்றிக்கொள்வது வீரபாண்டி ராஜா போன்றோரின் மறைவு தனிமனித மறைவு கிடையாது. ஒரு தூணே சாய்வது போல என அந்த இரங்கல் செய்தி குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று விட்டு தனி விமானம் மூலமாக மதியம் 2 மணி அளவில் சேலம் மாவட்டத்திற்கு வரும் முதலமைச்சர் ஸ்டாலின், அங்கிருந்து கார் மூலமாக வீரபாண்டி ராஜாவின் ஊரான பூலாவரிக்கு செல்ல இருக்கிறார்.

அதன் பின்னர் அங்கே வீரபாண்டி ராஜா அவர்களின் இறுதிச்சடங்கு நிகழ்வில் பங்கேற்று விட்டு வீரபாண்டி ராஜாவின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிக்கிறார். அதனை அடுத்து மாலை நான்கு முப்பது மணி அளவில் சேலம் விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்ல இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என திமுகவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.