கொலை செய்ததை தலித் இளைஞரே ஒப்பு கொண்ட பிறகும் சாதியை வைத்து காப்பாற்ற துடிக்கும் திருமாவளவன்

கொலை செய்ததை தலித் இளைஞரே ஒப்பு கொண்ட பிறகும் சாதியை வைத்து காப்பாற்ற துடிக்கும் திருமாவளவன்

சமீபத்தில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் தன்னை காதலிக்க வில்லை என்ற ஒரே காரணத்திற்காக வன்னிய சமூகத்தை சேர்ந்த திலகவதி என்ற கல்லூரி மாணவியை அப்பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்ற தலித் இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த பெண்ணின் உறவினர்கள் இந்த கொலைக்கு காரணமானவனை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் கொலை செய்ததாக கூறப்படும் தலித் இளைஞர் ஆகாஷின் தந்தை இந்த கொலையில் தன் மகனுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும்,இவர் தலித் என்பதால் அந்த பெண்ணை அவரின் உறவினர்களே ஆணவ கொலை செய்து விட்டு ஆகாஷ் மீது பழி சுமத்துவதாகவும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
இவரை போலவே தலித் மக்களுக்காக அரசியல் செய்யும் விசிகவின் திருமாவளவனும் இந்த கொலையில் தேவையில்லாமல் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தன்னை இணைத்து பேசுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.மேலும் இது அந்த பெண்ணின் உறவினர்களால் செய்யப்பட்ட ஆணவ கொலை என்றும், வேண்டுமென்றே தலித் இளைஞர் மீது பழி சுமத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கொலை வழக்கில் கைது செய்யபட்ட அந்த தலித் இளைஞர் ஆகாஷ் தான் இந்த கொலையை செய்ததாக அவரே வாக்குமூலம் அளித்துள்ளார். இவ்வாறு கொலை செய்த அந்த இளைஞரே குற்றத்தை ஒப்பு கொண்டு வாக்கு மூலம் கொடுத்துள்ள நிலையில் பொது வாழ்க்கையில் இருக்கும் தலைவர் திருமாவளவன் சாதிய அடிப்படையில் கொலைக்கு காரணமான இளைஞரை காப்பாற்ற முயற்சிப்பது பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரை போன்றவர்கள் இப்படி இந்த இளைஞர்களை ஊக்க படுத்துவதால் தான் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

error: Content is protected !!
WhatsApp chat