பாமக பாஜகவினருக்கு பயந்த திருமாவளவன்! எடப்பாடி பழனிசாமியிடம் தஞ்சமா?

0
92

பாமக பாஜகவினருக்கு பயந்த திருமாவளவன்! எடப்பாடி பழனிசாமியிடம் தஞ்சமா?

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும்,சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள திருமாவளவன் தொடர்ந்து மக்களிடம் சாதி மற்றும் மத அடிப்படையிலான பிரிவினைகளை தூண்டும் வகையில் பேசி சர்ச்சையை ஏற்படுத்துவது வழக்கமானது. தன்னுடைய வாக்கு வங்கி அரசியலுக்காக தொடர்ந்து தலித் இன மக்களை பயன்படுத்தி வருவதும், அவர்களை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக திசை திருப்பி விடுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தலித் மக்களின் அடையாளமாக உள்ள அவரையோ அல்லது அவரது தொண்டர்களையோ அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட எந்த கட்சிகளும் கண்டு கொள்ளாமல் கடந்து செல்கின்றன. எங்கே அவரை விமர்சனம் செய்ய அது தங்களுடைய வாக்கு வங்கியை பாதிக்குமோ என்ற அச்சதிலேயே இவர்களது அடாவடி தனத்தை எல்லாம் கண்டு கொள்ளாமல் கடந்து செல்கின்றன.

வழக்கம் போலவே தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் இந்து மத கோவில்கள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசியது இந்து மதத்தினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மற்ற மதத்தினரின் வாக்குகளை பெற நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள திருமாவளவன் இவ்வளவு கேவலமான அரசியலை செய்யலாமா என சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

இந்து கோவில்கள் குறித்து விசிக கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதை எதிர்த்து பாமக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல இடங்களில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். பல இடங்களில் அவரை கைது செய்ய வலியுறுத்தி வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இதை சற்றும் எதிர்பார்க்காத திருமாவளவன் சூழ்நிலையை சமாளிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சமீபத்தில் சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினராக சில கோரிக்கைகளை வலியுறுத்தி சந்திப்பு நிகழ்ந்ததாக தெரிவித்திருந்தாலும் இந்த நேரத்தில் நடந்த சந்திப்பு ஏன் என்ற சந்தேகமும் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் எழுகிறது.

தொடர்ந்து சாதி மற்றும் மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி வந்தாலும் எந்த கட்சியும் அதை கண்டு கொள்வதில்லை. வழக்கம் போலவே இதை பாமக மற்றும் பாஜக கட்சி நிர்வாகிகள் மட்டுமே கண்டித்து அவருக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் வழக்கு தொடர்வது என கடுமையான அழுத்தத்தை கொடுத்து வருகின்றனர். முன்பு போல இல்லாமல் தற்போது பாஜக மற்றும் பாமக ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருப்பதால் தனக்கு எதிராக ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டதால் தான் திருமாவளவன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்து தஞ்சமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் இது பற்றிய செய்திகளுக்கு: கீழுள்ள செய்தியையும் பாருங்கள்

திருமாவளவனின் எம்பி பதவிக்கு வந்தது ஆபத்து! மகளிர் அணியினரே வைத்த ஆப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சி தடை செய்யப்படுகிறதா?! விஸ்வரூபம் எடுக்கும் திருமாவளவனின் சர்ச்சை பேச்சு!

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

author avatar
Ammasi Manickam