திருமாவளவனின் எம்பி பதவிக்கு வந்தது ஆபத்து! மகளிர் அணியினரே வைத்த ஆப்பு

0
157
VCK Leader Thirumavalavan Controversial Speech against Hindu Temple-News4 Tamil Latest Online Tamil News Today
VCK Leader Thirumavalavan Controversial Speech against Hindu Temple-News4 Tamil Latest Online Tamil News Today

திருமாவளவனின் எம்பி பதவிக்கு வந்தது ஆபத்து! மகளிர் அணியினரே வைத்த ஆப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும்,சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள திருமாவளவன் தொடர்ந்து மக்களிடம் சாதி மற்றும் மத அடிப்படையிலான பிரிவினைகளை தூண்டும் வகையில் பேசி சர்ச்சையை ஏற்படுத்துவது வழக்கமானது.

அந்த வகையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் இந்து மத கோவில்கள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசியது அவரது எம்பி பதவிக்கு ஆபத்தாக முடியும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

இந்து கோவில்கள் குறித்து பேசிய அவருடைய சர்ச்சை பேச்சை எதிர்த்தும்,அதற்காக அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகளும்,பொது மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இது போன்று திருமாவளவன் தொடர்ந்து மக்களிடம் மத மோதலை உண்டு பண்ணும் நோக்கில் பேசிவருபதாகவும் அவரை உடனடியாக கைது செய்யவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு எதிராக இந்த விவகாரத்தை கையிலெடுத்த இந்து அமைப்பினர் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி காங்கேயம் காவல் நிலையத்தில் இந்து மக்கள் கட்சியின் சார்பாக மனு அளித்துள்ளனர். இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் ஒருமைப்பாட்டிற்கு எதிராகவும் சமூகவலைத்தளங்களிலும், கட்சி கூட்டங்கள் மூலம் பொது இடங்களிலும், தொடர்ந்து மக்களிடையே மதக் கலவரத்தை தூண்டும் வகையில் திருமாவளவன் செயல்பட்டு வருவதாக இந்த புகார் மனுவில் இந்து மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி இந்த மனுவில் வலியுறுத்தி உள்ளது.

இந்நிலையில் நடிகை காயத்ரிரகுராம் தன்னுடைய சமூக வலைதள பக்கமான டிவிட்டரில் திருமாவளவன் தொடர்ந்து இந்து மதத்திற்கு எதிராக பேசி வருவதாகவும் , அவருக்கு இந்துக்கள் பாடம் கற்பிக்கவேண்டும் என்றும் அவரை எங்கு பார்த்தாலும் செருப்பால் அடியுங்கள் என்றும் பதிவிட்டிருந்தார், இந்நிலையில் அவருடைய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காயத்ரி ரகுராம் வீட்டினை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மகளிர் அணியினர் முற்றுகையிட்டு அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் அவசரமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்யக்கூடாது என்றும் என்னை கைது செய்ய வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து தற்போது வரை தமிழக காவல்துறை இதுவரை திருமாவளவனை எதிர்த்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இது இந்து மத பற்றாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் காயத்ரி ரகுராம் வீட்டினை முற்றுகையிட்டு விடுதலை சிறுத்தைகள் பெண் அமைப்பினர் நடத்திய போராட்டத்தால் இந்த விவகாரமனது தேசிய அளவில் நாடாளுமன்ற விவகாரம் குழு தலைவர் வரை சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து தமிழக தலைமை செயலாளருக்கு நாடாளுமன்ற விவகாரம் குழு நோட்டீஸ் அனுப்பவுள்ளதாகவும், மேலும் திருமாவளவன் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் விடியோவாக வெளியாகியுள்ளதும் அவருக்கு தற்போது எதிராக அமைந்துள்ளது.

மேலும் இந்த பேச்சு குறித்து வருத்தம் தெரிவித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூட அவர் பேசியதை நியாயம் உண்மை என்றே வலியுறுத்தியுள்ளதால் நிச்சயம் திருமாவளவனின் எம்பி பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்று உறுதியாகியுள்ளது. மேலும் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியான நாடாளுமன்ற உறுப்பினர் எந்த மதத்தினையும் இழிவு செய்து பேசக்கூடாது என்று விதியிருக்கிறது. அந்த வகையில் பார்த்தாலும் அவருக்கு எதிராகவே சூழ்நிலை அமைந்துள்ளது.

திருமாவளவனின் இந்த சர்ச்சை பேச்சால் காயத்ரி ரகுராம் வீட்டில் போராட்டத்தை நடத்தி இந்த விவகாரத்தை தேசிய அளவில் எடுத்து சென்று தற்போது திருமாவளவனின் எம்பி பதவிக்கும் ஆப்பு வைத்துள்ளனர் அவரது சொந்த கட்சியின் மகளிர் அணியினர்.

author avatar
Ammasi Manickam